• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • வேலைவாய்ப்பு : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை

வேலைவாய்ப்பு : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை

Chennai Metro : வேலைவாய்ப்பு தேடுபவர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகார பூர்வ இணையத்தளத்தில் வெளிவரும் அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம். இதனை தவிர வேறு எந்தவொரு இணையதளத்திலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலைவாய்ப்பு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

  • Share this:
    கோயம்பேடு , சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் இருப்பின் அதற்கான அறிவிப்புகள் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்படும். அவைதான் உண்மையான அறிவிப்புகள் என்றும் பிற இணையத்தளத்தில் அவ்வப்போது வெளிவரும் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

    இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு துறைகள் உள்ளது. இத்துறைகளில் கீழ் பல்வேறு பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றது. இந்த துறைகளிலோ துறை சார்ந்த பிரிவுகளிலோ ஏதேனும் வேலைவாய்ப்பு இருப்பின் அதற்கான முன் அறிவிப்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் www.chennaimetrorail.org தெரிந்து கொள்ளலாம்.

    இதை தவிர தினசரி தமிழ் நாளிதழ் , ஆங்கில நாளிதழ் , மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்பு தாள்களிலும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றது. எனவே வேலை வாய்ப்பிற்கு தகுதி உடையவர்கள் வேலைவாய்ப்பு தேடுபவர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகார பூர்வ இணையத்தளத்தில் வெளிவரும் அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

    இதனை தவிர வேறு எந்தவொரு இணையதளத்திலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலைவாய்ப்பு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்நிறுவனத்தின் பல்வேறு வேலை வாய்ப்புகள் இருப்பதாக பொய்யான இணையத்தளத்தில் செய்திகளை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொய்யான இணையத்தளத்தில் வெளியாகும் செய்திகளை / விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். இதற்க்கு எந்த விதத்திலும் இந்நிறுவனம் பொறுப்பேற்காது. இத்தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: