ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பொது மேலாளர் பணி: விவரம் உள்ளே

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பொது மேலாளர் பணி: விவரம் உள்ளே

சென்னை மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில்

வேலைவாய்ப்பு தொடர்பாக அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, Chennai Metro இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பொது மேலாளர் (ஜெனரல் மேனேஜர்) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிலையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 12

பணி  நிலவரம்: 

வயது வரம்புகல்வித் தகுதி
பொது மேலாளர் (signaling & telecom)145-55பொறியியல் துறையில் பட்டம் பெற்றிக்க வேண்டும்தொடர்புடைய துறைகளில்   20 ஆண்டு கால பணி  அனுபவம் இருக்க வேண்டும்
பொது மேலாளர் (Operations)145- 55இளங்கலைப்  படிப்புடன், வணிக நிர்வாகத்தில் முதுநிலை/ முதுகலை/ பட்டயம் பெற்றவர்கள்தொடர்புடைய துறைகளில் 20 ஆண்டு கால பணி அனுபவம் இருக்க வேண்டும்
பொது மேலாளர் (Electrical )145- 55பி.இ, பி.டெக் எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்  இன்ஜினியரிங் உள்ளிட்ட பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்,தொடர்புடைய துறைகளில் 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிக்க வேண்டும்.
பொது மேலாளர் (மனித வளம் )145- 55இளங்கலைப் படிப்புடன், மனித வளம் தொடர்புடைய படிப்புகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்தொடர்புடைய துணிகளில் 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
பொது மேலாளர்  (Planning & Business Development)145- 55 எம்பிஏ முதுநிலை படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்தொடர்புடைய துறைகளில் 20 ஆண்டு கால  பணிஅனுபவம் இருக்க வேண்டும்
கூடுதல் பொது மேலாளர் (Under Ground Construction)147பி.இ ., பி.டெக் (சிவில்) பட்டமும் , சிவில் படிப்புகளில் முதுநிலைப்பட்டமும் பெற்றிருக்க வேண்டும்தொடர்புடைய துறைகளில் 17 ஆண்டு கால அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
கூடுதல் பொது மேலாளர் (IT & AFC)147எலெக்ட்ரானிக்ஸ், ஐ.டி, கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் பி.இ,. பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்தொடர்புடைய துறைகளில் 17 ஆண்டுகாலம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
துணை பொது மேலாளர் (Joint General Manager -  (Underground Construction)143பி.இ ., பி.டெக் (சிவில்)  மற்றும் சிவில் படிப்புகளில் முதுநிலைப்பட்டம்   பெற்றிருக்க வேண்டும்தொடர்புடைய துறைகளில் 15 ஆண்டு கால  பணி  அனுபவம் பெற்றிருக்க வேண்டும் 
துணை பொது மேலாளர் (Joint General Manager -  Architecture)143 பி. ஆர்க் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.தொடர்புடைய துறைகளில் 15 ஆண்டு காலம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
 இணை பொது மேலாளர் (Deputy General Manager- Marketing) 1 40வணிக நிர்வாகத்தில் முதநிலை/ முதுகலை/ பட்டயம் பெற்றிருக்க வேண்டும்தொடர்புடைய துறைகளில் 13 ஆண்டு கால பணி  அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
 இணை பொது மேலாளர் (Deputy General Manager- Transport Planning)135போக்குவரத்துத் துறைகளில் எம்.இ,. எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்தொடர்புடைய துறைகளில் 4 ஆண்டு கால பணி அனுபவம் இருக்க வேண்டும்
தலைமை கண்காணிப்பு அதிகாரி (Chief Vigilance officer)155 அயல்பணி அடிப்படையில் (Deputation Basis) தேர்வு செய்யப்படுவார்கள். குரூப் 'ஏ' அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம்.

பணி ஒப்பந்த காலம்: 2 ஆண்டுகள். தேவைப்படும் பட்சத்தில், விண்ணப்பதாரரின் செயல்பாடுகளின் அடிப்படையில் பணிக்காலம் நீட்டிக்கப்படும்.

வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால்,044-2379 2000 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.hr@cmrl.in என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

பணிக்கான விரிவான விண்ணப்ப படிவம் ஐ.சி.எப்.ஆர்.இ வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த விரிவான விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்து, உரிய சான்றிதழ்களுடன் (அசல் கல்வி சான்றிதழ் மற்றும் பணி சான்றிதழ்) உரிய வகையில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவுரைகளும் வலைதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 14.05.2022. அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி

JOINT GENERAL MANAGER (HR)

CHENNAI METRO RAIL LIMITED

CMRL DEPOT, ADMIN BUILDING,

POONAMALLEE HIGH ROAD,

KOYAMBEDU, CHENNAI - 600 107

தெளிவுரை வேண்டுவோர்: அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, Chennai Metro இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

First published:

Tags: Chennai metro, Employment, Job