ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

8-ம் வகுப்பு தேர்ச்சி போதும் ; மாதம் ரூ.63,200 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை!

8-ம் வகுப்பு தேர்ச்சி போதும் ; மாதம் ரூ.63,200 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை!

இந்திய அஞ்சல் துறை

இந்திய அஞ்சல் துறை

India Postal Department Recruitment : சென்னையில் உள்ள அஞ்சல் துறையில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையில் உள்ள அஞ்சல் துறை மெயில் மோட்டர் சேவையில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்குத் திறமையான ஆர்டிசன் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தேவையான தகுதிகள் என்ன மற்றும் சம்பள விவரங்கள் கீழ் வருமாறு:-

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணி பிரிவுகள்காலிப்பணியிடம்
திறமையான கைவினைஞர்கள்எம்.வி.மெக்கானிக்4
எம்.வி.எலக்ட்ரீஷியன்1
செம்பு & டின்ஸ்மித்1
அப்ஹோல்ஸ்டர்1
மொத்தம்7

வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். அரசுப் பணியாளராக இருந்தால் அதிகபட்சம் 40 வயது வரை இருக்கலாம். எஸ்.சி பிரிவினருக்கு 5 வருட வயது சலுகை மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 வருடச் சலுகை உண்டு. ஒதுக்கீடு முறையில் வராத பணிகளுக்கு எஸ்.சி/எஸ்.டி/ஓ.பி.சி வயது சலுகை கிடையாது.

சம்பளம்:

குரூப்- சி பிரிவில் இந்த பணிகள் இடம்பெறுகின்றனர். 7வது சம்பள விபரத்தின்படி நிலை-2 ரூ.19,000-63,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

படைப்பிரிவுகளுக்கு ஏற்ற சான்றிதழ் படிப்பு அல்லது 8 வகுப்பு தேர்ச்சி தேவை. மேலும் எம்.வி.மெக்கானிக் பணிக்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களைத் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டம், தேதி, இடம் மற்றும் கால அளவு ஹால் டிக்கெட்டில் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிப்பதற்குத் தேவையான விவரங்கள்:

விண்ணப்பதார்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை மட்டுமே உபயோகிக்க வேண்டும். தமிழ்/ஆங்கிலம்/ஹிந்தி மொழிகளில் படிவத்தை நிரப்பலாம்.

விண்ணப்பக்கட்டணமாக ரூ.100/- ஐபிஓ பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பதார்களில் இருந்து திறன் தேர்வுக்குத் தேர்வு செய்யப்படுபவர் தேர்வுக் கட்டணமாக ரூ.400/-ஐஓபி அல்லது யுசிஆர் மூலம் செலுத்தித் தேர்வுக்குக் கொண்டுவர வேண்டும். எஸ்.சி/எஸ்.டி மற்றும் பெண்கள் இதனைச் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பங்களை speed post/Registered post மூலம் மட்டும் அனுப்பவும்.

விண்ணப்பத்தில் புகைப்படத்தைக் கண்டிப்பாக ஒட்ட வேண்டும். மேலும் கையொப்பம் மிக அவசியம்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ் நகல்கள்:

வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், தொழில்நுட்ப சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், அனுபவ சான்றிதழ், சாதி சான்றிதழ் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர் வருமான சான்றிதழ் இணைக்க வேண்டும்

Also Read : இந்திய விமானப்படையில் பல்வேறு காலியிடங்கள்... இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

இந்திய அஞ்சல் துறை அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கச் செய்து விவரங்களைப் பூர்த்தி செய்து தபால் மூலம் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Senior Manager (JAG), Mail Motor Service,NO:37, Greams Road, Chennai-600 006.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://www.indiapost.gov.in/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 09.01.2023.

First published:

Tags: Central Government Jobs, Chennai, India post, Jobs