Home /News /employment /

வருமானவரி அதிகாரி பணி.. ஆன்லைனில் உலாவும் போலி ஆட்சேர்ப்புக் கடிதம் – வருமான வரித்துறை எச்சரிக்கை

வருமானவரி அதிகாரி பணி.. ஆன்லைனில் உலாவும் போலி ஆட்சேர்ப்புக் கடிதம் – வருமான வரித்துறை எச்சரிக்கை

காட்சிப் படம்

காட்சிப் படம்

வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளிக்கும் எந்தவொரு இடைத்தரகர்கள், நிறுவனம் அல்லது அமைப்புகளின் வலையிலும் விழ வேண்டாம் - வருமான வரித்துறை

    வருமான வரித்துறையில், வருமான வரி அதிகாரியின் பணியில் சேர்வதற்கான போலியான ஆட்சேர்ப்புக் கடிதம் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதாக என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, கூடுதல் வருமான வரி ஆணையர்  வி. வித்யாதர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,"வருமான வரித்துறையில், வருமான வரி அதிகாரியின் பணியில் சேர்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்ட கடிதம், தமிழகத்தில் சிலருக்கு வழங்குவதாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுவதாக தெரிகிறது.

    வருமான வரி அதிகாரி பணியிடமானது முற்றிலும் பதவி உயர்வால் நிரப்பப்படுகிறது. மேற்படி பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு இல்லை எனவும் இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. மேலும், வருமான வரித்துறையில் உள்ள பல்வேறு அரசிதழ் அல்லாத (Non-gazatted) பணிகளுக்கான ஆட்சேர்ப்பு ‘பணியாளர் தேர்வாணையத்தால்’ (SSC) மேற்கொள்ளப்படுகிறது. வருமான வரித்துறையில் உள்ள ‘குரூப் ஏ’ பதவிகளுக்ககான அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான செயல்முறை, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெளிவுபடுத்தப்படுகிறது.

    ஆகவே, பொது மக்கள், பணியாளர் தேர்வாணையம்(SSC) / யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC)இன் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைப் பார்க்குமாறும் அல்லது ஆட்சேர்ப்பு செயல்முறை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், அவர்களின் அலுவலகங்களைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இதையும் வாசிக்க: அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் பணி.. எந்த எழுத்துத் தேர்வும் இல்லை

    வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளிக்கும் எந்தவொரு இடைத்தரகர்கள், நிறுவனம் அல்லது அமைப்புகளின் வலையிலும் விழ வேண்டாம் என்றும், மேலும் மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவோ பெறப்படும் தவறான விளம்பரங்கள், கடிதங்கள் மூலமாகத் தெரிவிக்கப்படும் இதுபோன்ற போலியான செய்திகளுக்கு பொதுமக்கள் இறையாகி விட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்".எனத் தெரிவிக்கப்பட்டது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Recruitment

    அடுத்த செய்தி