முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / அதிகரிக்கும் வேலையிழப்புக்கு மத்தியில் ப்ரீ ப்ளேஸ்மெண்டில் கலக்கும் சென்னை ஐஐடி மாணவர்கள்

அதிகரிக்கும் வேலையிழப்புக்கு மத்தியில் ப்ரீ ப்ளேஸ்மெண்டில் கலக்கும் சென்னை ஐஐடி மாணவர்கள்

சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி

உள்ளகப் பயிற்சி காலத்தில் மாணவர்கள் சிறந்த முறையில் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதால்தான் முன்வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையும் சீராக அதிகரித்து வருகிறது

  • Last Updated :
  • Tamil Nadu, India

Chennai IIT pre placement offers:சென்னை ஐஐடி-யில், 2022-23ம் ஆண்டுக்கான கல்வி வளாக வேலைவாய்ப்புகள் தொடங்குவதற்கு முன்பாகவே 333 மாணவர்கள் முன் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் (Pre-Placement Order). இந்த எண்ணிக்கை கடந்த 6 ஆண்டுகளை விட அதிகமாகும்.

பட்டப்படிப்பின் இறுதியாண்டில் கோடைக்கால உள்ளகப் பயிற்சியை (Internship Programe) சென்னை ஐஐடி ஆஃப்லைன் முறையில் நடத்தியது. இதன்கீழ், பல்வேறு தொழிற் நிறுவனங்களில் மாணவர்கள் உள்ளக பயிற்சியை மேற்கொண்டனர். அப்படி பயிற்சி பெற்ற மானவர்களில், 333 பேர் முன் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் (Pre Placement Order)  .

2021-22ல் மொத்தம் 231 ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் மட்டுமே முன்வேலைவாய்ப்புகளை (Pre-Placement offers) பெற்றிருந்த நிலையில், 2022-23 கல்வியாண்டில் ஏறத்தாழ 333 பேருக்கு (13 நவம்பர் 2022 நிலவரப்படி) இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. முதல்கட்ட வளாக வேலைவாய்ப்பை (Placement Campus) 1 டிசம்பர் 2022 அன்று தொடங்கத் திட்டமிட்டுள்ளதால், அதுவரை முன்வேலைவாய்ப்புக்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று சென்னை ஐஐடி தெரிவித்தது.

முன்வேலைவாய்ப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதற்கான காரணிகளை விளக்கிய ஐஐடி மெட்ராஸ் ஆலோசகர் (வேலைவாய்ப்பு) பேராசிரியர் சத்யன், " இந்த அளவிற்கு முன்வேலைவாய்ப்புகளின் செயல்திறன் இருப்பதற்கு இக்கல்வி நிறுவனத்தின் உறுதியான உள்ளகப் பயிற்சித் திட்டம் முக்கிய காரணியாக விளங்குகிறது. மாணவர்கள் நிறுவனங்களில் உள்ளகப் பயிற்சி மேற்கொள்வதற்கும், அதனைத் தொடர்ந்து முன்வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் இந்த நடைமுறை உதவிகரமாக இருந்து வருகிறது. உள்ளகப் பயிற்சி காலத்தில் மாணவர்கள் சிறந்த முறையில் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதால்தான் முன்வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையும் சீராக அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும், "இந்த ஆண்டு பிபிஓ-க்கள் (முன்வேலைவாய்ப்பு) அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சியை அளித்து அவர்களின் திறனை மதிப்பிடும் வகையில் நீண்டகால நேர்காணல் நடைமுறையை மேற்கொள்ளவும், முன்வேலைவாய்ப்புகளை வழங்கவும் நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறோம். மாணவர் ஒருவருக்கு நிறுவனம் அளிக்கும் முன்வேலைவாய்ப்பை அவர் ஏற்றுக் கொள்ளும்போது, அந்த நிறுவனத்துடன் நீண்டகாலத்திற்கு நல்லதொரு தொடர்பு ஏற்பட வழிவகுக்கும்" என்றார்.

ஆண்டு2016-172017-182018-192019-202020-212021-222022-23
பிபிஓ73114135170186231333*

(*13 நவம்பர் 2022 நிலவரப்படி - தகவல் சென்னை ஐஐடி)

அதிக எண்ணிக்கையில் முன்வேலைவாய்ப்புகளை (PPOs) வழங்கிய முதல் ஐந்து நிறுவனங்கள்

2022-23முன்வேலை வாய்ப்பு -2022
குவால்காம்19
ஹனிவெல்19
மைக்ரோசாப்ட்17
கோல்ட்மேன் சாக்ஸ்15
டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ்14
ஆரக்கிள்13

ஐஐடி மெட்ராஸ்- வளாக உள்ளகப் பயிற்சி தரவுகள்

விவரம்2020-21 (மொத்தம், ஆன்லைன் முறை)2021-22 (மொத்தம், ஆன்லைன் முறை)2022-23* (ஹைபிரிட் முறை)
பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்132146122
பதிவு செய்யப்பட்ட சுயவிவரங்கள்242247203
தேவையுள்ள பயிற்சிஇடங்கள்618772557
பதிவு செய்யப்பட்ட மாணவர்கள்97013301397
உள்ளகப் பயிற்சிக்கு அனுப்பப்பட்ட மாணவர்கள்542708504
உள்ளகப் பயிற்சி சதவீதம்57%54%36% till date

top videos

    வளாக வேலைவாய்ப்புகளுக்கு உள்ளகப் பயிற்சி எந்த அளவுக்கு முக்கியம் என்பதை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் ஆலோசகர் (உள்ளகப் பயிற்சி) பேராசிரியர் பி.முருகவேல், "மாணவர்கள் தாங்கள் கற்றறிந்த திறன்களை வெளிப்படுத்தவும், தாங்கள் விரும்பும் திறமையான மாணவர்களை நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கவும் இந்த உள்ளகப் பயிற்சித் திட்டம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. ஐஐடி மெட்ராஸ்-ன் உள்ளகப் பயிற்சித் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதும், நடப்பாண்டில் முன்வேலைவாய்ப்பு பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

    First published:

    Tags: Chennai IIT, IIT Madras