சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தில் செயல்படும் சிஐசிஎஸ்ஆர் (Centre for Industrial Consultancy and Sponsored Research) மையத்தில் Project Manager, Project Associate, Senior Executive, and Junior Executive ஆகிய பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியுடையவர்கள் உடனடியாக வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்ப படிவங்களை ஆன்லைனில் மூலம் சமர்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பணியிடங்கள்:
பணியின் பெயர் |
கல்வித் தகுதி |
ஊதியம் |
Project manager |
கடற்சார் பிரிவில் ஐந்து ஆண்டுகள் பறந்த அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
சிவில் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் |
மாதம் ரூ 27,500/- முதல் ரூ 1,00,000 வரை |
Project
Associate (3
Posts) With
design
experience |
வடிவமைப்புத் துறையில் இரண்டு ஆண்டுகள் பறந்த அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
சிவில் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் |
மாதம் ரூ 21,500/- முதல் ரூ 75, 000 வரை |
Junior
Executive (3
Posts) With
drafting
experience |
சிவில் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆட்டோகாட் மென்மொருளில் கைதேர்ந்தவராக இருக்க வேண்டும் |
மாதம் ரூ 16,000/- முதல் ரூ 50, 000 வரை
|
Junior
Executive (1
Post) |
ஏதாவதொரு பாடப்பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
மாதம் ரூ 16,000/- முதல் ரூ 50, 000 வரை |
தற்காலிக பணி. ஓராண்டுக்குப் பின் தேர்வர்களின் செயல்திறன் அடிப்படையில் நீட்டிக்கப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15.04.22 ஆகும்.
https://icandsr.iitm.ac.in/recruitment/ எனும் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்
ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்புகள் மற்றும் விதிமுறைகளை அங்கு காணலாம்.
விண்ணப்பிக்க விரும்பும் பணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கல்வித்தகுதி, வயது, கணினி சார்ந்த அறிவு, இருப்பிடம், உடற்தகுதி, சான்று ஆவணங்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைபடம், மின்னஞ்சல் முகவரி போன்ற இதர பொது விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எதிர்காலத் தேவைகளுக்காக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
தெளிவுரை வேண்டுவோர்:
அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 044- 2257 9796 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். : recruitment@imail.iitm.ac.in, icsrrecruitment@iitm.ac.in மின்னஞ்சல் முகவரிகளை அணுகலாம்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு
https://icandsr.iitm.ac.in/recruitment/ இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.