சென்னை ஐ.சி.எஃப் -ல் வேலை வேண்டுமா?

சென்னை ஐ.சி.எஃப் -ல் வேலை வேண்டுமா?
  • News18
  • Last Updated: August 4, 2019, 6:12 PM IST
  • Share this:
இந்திய ரயில்வேயின் சென்னை இணைப்புப் பெட்டி(ICF) தொழிற்சாலையின் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள பிசியோதெரபிஸ்ட் மற்றும் பார்மசிஸ்ட்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை: பிசியோதெரபிஸ்ட்

காலியிடங்கள் : 01


சம்பளம் : மாதம் ரூ.56,000 (தோராயமாக)

வயது வரம்பு : 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்

தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்று அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் இரண்டு ஆண்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்வேலை : பார்மசிஸ்ட்

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ஒன்றுக்கு ரூ.47,000( தோராயமாக)

வயது வரம்பு: 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் பாடங்கள் கொண்ட பிரிவில் 12-ம் வகுப்பு முடித்து பார்மசிஸ்ட் பிரிவில் டிப்ளமோ அல்லது பி.பார்ம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.500, எஸ்.சி, எஸ்.டி , முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை டி.டி.யாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் அல்லது தயார் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Assistant Personal Officer/recruitment, Integral Coach Factory, Chennai - 600038

மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/Dotcom/Downloads/1564050413119-pharma.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 19.08.2019
First published: August 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்