சென்னை ஐ.சி.எப்-ல் தொழில்பழகுநர் பணி... தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே!

தமிழக வேலை தமிழருக்கே என்பது சமூக வலைதளங்களில் ட்ரண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.

Vaijayanthi S | news18
Updated: May 25, 2019, 1:48 PM IST
சென்னை ஐ.சி.எப்-ல் தொழில்பழகுநர் பணி... தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே!
தமிழக வேலை தமிழருக்கே என்பது சமூக வலைதளங்களில் ட்ரண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.
Vaijayanthi S | news18
Updated: May 25, 2019, 1:48 PM IST
தமிழக வேலை தமிழருக்கே என்கிற போராட்டத்தின் எதிரொலியாக, சென்னை ICF-ல் பழகுநர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் அறிவிப்பாணையில் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு வந்திருக்கிறது.

இந்த விதி ஏற்கனவே இருந்ததா? அல்லது தற்போதுதான் சேர்க்கப்பட்டுள்ளதா? அது பற்றி முழுமையான விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ரயில்வே, அஞ்சல் துறை உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டினருக்கான பணிகளில் பிற மாநிலத்தவர்கள் முறைகேடாக நியமனம் செய்யப்படுகின்றனர். இது குறித்து அண்மையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 1,765 தொழிற்பழகுநர் பணியிடத்திற்கு 1, 600 இடங்கள் பிற மாநிலத்தவர்களுக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்டது.


தகுதியிருந்தும் தமிழ்நாட்டினர் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு கடந்த மாதம் செய்தி ஒளிபரப்பியது.

தொடர்ந்து கடந்த 3-ம் தேதி தமிழ் தேசியப் பேரியக்கம், பயிற்சி பெற்ற தொழிற் பழகுநர்கள் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாட்டினர் தமிழக வேலை தமிழருக்கே என்பது சமூக வலைதளங்களில் ட்ரண்டிங் ஆனது.

Loading...

ICF வெளியிட்ட அறிவிப்பாணை


ICF வெளியிட்ட அறிவிப்பாணை


இந்நிலையில், ரயில்வேத் துறை சென்னை ICFல் பழகுநர் பணிக்கு (அப்ரண்டிஸ்) ஆட்களை தேர்வு செய்யும் 20-ம் தேதியிட்ட அறிவிப்பாணையில், தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Also see... வேலை மட்டுமா பறிபோகிறது…? தவிக்கும் தமிழக இளைஞர்கள்

Also see...
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...