தமிழகத்தில் உள்ள
சென்னை நீதித்துறை மாவட்ட சார்நிலை நீதித்துறை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: 33
(i)நகல் பரிசோதகர் (Examiner) - 1;
(ii) முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailifr) - 4;
(iii)இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff) - 7;
(iv) கட்டளை எழுத்தர் (Process Writer) - 3;
(v)ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator) - 18
கல்வித் தகுதி:
அனைத்து பதவிகளுக்கும், எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது) உயர்நிலைப் படிப்புகளில் (அல்லது) கல்லூரிப் படிப்புகளில் சேருவதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Xerox Operator பதவிக்கு மட்டும் கூடுதலாக ஜெராக்ஸ் இயந்திரத்தை இயங்குவதில் 6 மாதங்களுக்கு முன்னனுபம் இருக்க வேண்டும்.
முக்கியமான நாட்கள்:
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள்: 22.08.2022
தேர்வுக் கட்டணம்: ரூ. 550
ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பதாரர் நிர்ணயக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்துடன் குறித்த நேரத்திற்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பிறகு நிராகரிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பம் செய்வது எப்படி:
இணைய வழி விண்ணப்பங்கள் https://www.mhc.tn.gov.in என்ற இணைய பக்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வின் தன்மை:
பகுதி – I, தமிழ் மொழி தகுதித்தேர்வு - 50 வினாக்கள்
பகுதி – II, பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு - 100 வினாக்கள்
இதையும் வாசிக்க: TNPSC Recruitment: டிஎன்பிஎஸ்சி 1089 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது
தேர்வு பட்டியல் தயாரித்தல்:
எழுத்துத் தேர்வின் பகுதி I மற்றும் பகுதி II
ஆகியவற்றில் விண்ணப்பதாரர்கள் பெற்ற, மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள்.
இடஒதுக்கீட்டு வீதியைப் பின்பற்றி, தகுதிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் 1:2 என்ற விகிதப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்படுவர்.
Tamil Nadu Judicial Districts Online application Notificationஉலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.