ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

எவ்வித தேர்வும் இல்லை... ரேசன் கடைகளில் 344 காலியிடங்கள்- எப்படி விண்ணப்பிப்பது?

எவ்வித தேர்வும் இல்லை... ரேசன் கடைகளில் 344 காலியிடங்கள்- எப்படி விண்ணப்பிப்பது?

காட்சிப் படம்

காட்சிப் படம்

Chennai Job Alert: "SBI Collect" என்ற சேவையைப் பயன்படுத்தி Online மூலம் விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம் அல்லது சென்னை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் நேரடியாக செலுத்தலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னை மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில்  நேரடி நியமனம் மூலம் விற்பனையாளர்கள்  மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  காலியிடங்கள்: 344

  கல்வித் தகுதிகள்: 

  விற்பனையாளர்: மேல்நிலை வகுப்பு (+2 தேர்ச்சி) அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி தேர்ச்சி

  கட்டுநர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  மேலும், விண்ணப்பதாரர் தமிழ் மொழியில் எழுதப் படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை: எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

  ' isDesktop="true" id="821786" youtubeid="aCFm0zOIgi0" category="employment">

  விண்ணப்பிக்கும் முறை: http://www.drbchn.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். விண்ணப்பதாரரின் புகைப்படம், கையெழுத்து, சாதிச் சான்றிதழ், கல்வித் தகுதிக்கான சான்றிதழ், குடும்ப அட்டை வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  விண்ணப்பக் கட்டணம்: விற்பனையாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.150/- மற்றும் கட்டுநர் (Packers) விண்ணப்பக் கட்டணம் ரூ.100/- ஆகும்.

  ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

  SBI Collect" என்ற சேவையைப் பயன்படுத்தி Online மூலம் விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம் அல்லது சென்னை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் நேரடியாக செலுத்தலாம்.

  கடைசி தேதி:  14.11.2022 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

  District Recruitment Bureau - 2022 Cooperative Department CHennai

  Cooperative Department Instruction to candidates

  Chennai Cooperative Department - Notification

  Published by:Salanraj R
  First published:

  Tags: Cooperative bank, Job Vacancy, Recruitment