ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சென்னை இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியில் 61 காலி பணியிடங்கள்: முழு விவரம் இதோ

சென்னை இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியில் 61 காலி பணியிடங்கள்: முழு விவரம் இதோ

சென்னை இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி

சென்னை இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி

Chennai ESIC hospital Walk in interview: அனைத்து பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தப்படும் என்றும், நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ESIC Medical College Job Alert: சென்னையில் உள்ள மூன்று இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் சீனியர் ரெசிடென்ட், சிறார் மருத்துவ உளவியாளர், துணை பேராசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அனைத்து பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தப்படும் என்றும், நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  காலியிடங்கள்: 61

  சீனியர் ரெசிடென்ட் - 59;

  சிறார் உளவியலாளர்கள் - 1;

  உதவி பேராசிரியர் - 1

  சீனியர் ரெசிடென்ட் அடிப்படை தகுதிகள்:

  சீனியர் ரெசிடென்ட் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் MD/MS/DNB போன்ற மருத்துவப் படிப்புகள் முடித்திருக்க வேண்டும். 01/01/2023 அன்றுள்ளபடி, 45 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.

  பணியின் காலம் : 3 ஆண்டுகள்.  3 ஆண்டுகள்  நிறைவடைந்த பிறகு பணியில் இருந்து விடுவிக்கப்படுவர். சம்பளம்  ரூ.1,40,326 ஆக இருக்கும்.

  சிறார் உளவியலாளர்கள்: விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 21-35 என்ற வரம்பில் இருக்க வேண்டும். உளவியல் பாடநெறியைல் எம்ஏ/எம்எஸ்சி முதுகலை பட்டத்துடன், மருத்துவ முறை உளவியல் பாடநெறியில் ஆய்வியல் நிறைஞர்(M.Phil)  மேற்கொண்டிருக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ. 47,838 ஆக இருக்கும். ஓராண்டு பணி காலம்.

  இதையும் வாசிக்கரூ.36,000 சம்பளத்தில் எஸ்பிஐ வங்கியில் கொட்டி கிடக்கும் காலி பணியிடங்கள்

  உதவி பேராசிரியர்:  நேர்காணலின்  போது 67 வயதை பூர்த்தியடைந்திருக்க கூடாது. “Teachers Eligibility Qualifications in Medical Institutions, 2022" விதிமுறையில் உள்ளவாறு ஆசிரியர் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் . மூன்றாண்டு பணி காலம். மேலும், இரண்டாண்டுகள் நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

  இதையும் வாசிக்க:  20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

  விண்ணப்பக் கட்டணம்:  விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம்: அனைத்து வகுப்பைச் சேர்ந்த பெண்கள் / பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர் கட்டணச் சலுகை பெற தகுதியுடைவர்கள்.ஏனைய தேர்வர்கள் அனைவரும், இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, ரூ.500 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

  நேர்காணல் நடைபெறும் இடம்: ESIC Medical College & Hospital, K.K Nagar, Chennai - 78

  மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job Vacancy, Recruitment