ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தொழில் முனைவோருக்கு 5 நாள் சிறப்பு பயிற்சி: இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

தொழில் முனைவோருக்கு 5 நாள் சிறப்பு பயிற்சி: இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

காட்சிப் படம்

காட்சிப் படம்

சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்து எப்படி திட்ட அறிக்கை தயாரித்தல் ஆகியவை பயிற்றுவிக்கப்படும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  தமிழ்நாட்டில் சுயமாக தொழில் தொடங்கும் விரும்புவர்களுக்கு 5 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டு விழிப்புணர்வு பயிற்சியளிக்கப்படும் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (Entrepreneurship Development and Innovation institute Programme) தெரிவித்துள்ளது.

  சென்னையில், வரும் நவம்பர் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த  முகாமில்  புதிதாக தொழில் தொடங்க ஆர்வமாக உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம்.

  சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்து எப்படி திட்ட அறிக்கை தயாரித்தல், விற்பனை மற்றும் சந்தைபடுத்துதல், மின்னணு முறையில் சந்தைப்படுத்தல், வணிகக் கணக்குகளின் அடிப்படைகள் மற்றும் கணக்கியல் விதிமுறைகள் கருத்துகள்/கோட்பாடுகள், இரட்டை நுழைவு முறைமை கணக்குகளின் வகைகள், ஆகியவையும் பயிற்றுவிக்கப்படும்.

  இதையும் படிங்க: ரூ.31,000 வரை உதவித்தொகை.. மத்திய அரசின் டிஆர்டிஓ நிறுவனத்தில் JRF பணி வாய்ப்பு!

  மேலும், விவரங்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் 044-22252081, 22252082, 96771 52265. 9444556099 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த மையத்தின் மின்னஞ்சல் முகவரி : asstd@editn.in மற்றும் admin@editn.in ஆகும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Entrepreneurship