ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சென்னையில் கிராம உதவியாளர் பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி?

சென்னையில் கிராம உதவியாளர் பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி?

இந்த கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 30.09.2022 அன்று 21 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும்

இந்த கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 30.09.2022 அன்று 21 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும்

இந்த கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 30.09.2022 அன்று 21 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

    சென்னை மாவட்ட வருவாய் அலகில் 9 வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 5ம் வகுப்பு கல்வித் தகுதி கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

    சம்பளம்: Special Time Scales of pay Matrix Level 6 (Minimum Rs.11;100- Maximum Rs.35,100) என்ற அடிப்படையில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் நேரடி விண்ணப்பங்கள் மூலம் நியமனம் செய்யப்பட இருக்கிறது.

    வயது வரம்பு: இந்த கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 30.09.2022 அன்று 21 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.  பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 32 வயது வரையும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகபட்சமாக 37 வயது வரையும் இருத்தல் வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் முறை: வரப்பெறும்  விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். பின்னர்,  எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்.

    இதர நிபந்தனைகள்: விண்ணப்பிக்கும் சென்னை மாவட்ட வருவாய் வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருApplication for Village Assistantத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் குறைந்த பட்ச கல்வித்தகுதியாக ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இதையும் வாசிக்க: கிராம உதவியாளர் பதவி உங்களுக்கு செட் ஆகுமா?

    கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு  விண்ணப்பம் செய்வது எப்படி? தமிழக அரசின் https://www.tn.gov.in , வருவாய் நிருவாகத் துறையின் இணையதளம் (https://cra.tn.gov.in) மற்றும் சென்னை மாவட்ட அதிகாரப்பூர்வமான இணையதளத்தின்  (https://chennai.nic.in) மூலம் விண்ணப்பங்கள்  சமர்ப்பிக்க வேண்டும்.

    இதையும் வாசிக்ககொட்டிக்கிடக்கும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி?

    நவம்பர் மாதம் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Published by:Salanraj R
    First published:

    Tags: Job Vacancy, Recruitment