முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / மத்திய அரசின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் வேலை: சென்னை இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

மத்திய அரசின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் வேலை: சென்னை இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

பாலவாக்கம், சின்ன நீலாங்கரை. சின்னாண்டி குப்பம், ஈஞ்சம்பாக்கம், நைனார் குப்பம் ஆகிய மீனவ கிராமங்களில் உள்ள இளைஞர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களான பாலவாக்கம், சின்ன நீலாங்கரை. சின்னாண்டி குப்பம், ஈஞ்சம்பாக்கம், நைனார் குப்பம் ஆகிய இந்த 5 கிராமங்களில் காலியாக உள்ள 5 பல்நோக்கு சேவை பணியாளர்கள் (Sagar Mitre) பணியிடங்களை ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது.

விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேற்படி, மீனவ கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராக இருக்க வேண்டும். 01.07.2022 அன்றைய தேதிபடி வயது 35-க்குள் இருக்க வேண்டும். மாதாந்திர ஊக்க ஊதியம் ரூ.15,000/- வழங்கப்படும்.

கல்வித் தகுதி: மீன்வள அறிவியல் (Fisheries Science), கடல் உயிரியல் (Marine Biology) மற்றும் விலங்கியல் (Zoology), ஆகிய பிரிவுகளில் முதுகலை / இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேற்கண்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இல்லாத பட்சத்தில் இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) நுண்ணுயிரியல் (Microbiology), தாவரவியல் (Botany) மற்றும் உயிர் வேதியியல் (Biochemistry) ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மேற்கண்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், தகவல் தொழில்நுட்பம் (IT) தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதையும் வாசிக்க: Jobs in Chennai: சென்னையில் அதிகம் வேலைவாய்ப்புகள் தரும் துறைகள் என்னென்ன தெரியுமா?

விருப்பமுள்ள நபர்கள் 28.02.2023 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs