ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஐடிஐ படித்தவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி... மாதம் ரூ.8000 உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?

ஐடிஐ படித்தவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி... மாதம் ரூ.8000 உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?

காட்சிப் படம்

காட்சிப் படம்

PM National Apprenticeship Mela 2022: இந்த முகாமில், அரசு மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்க உள்ளனர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  ஐடிஐ படித்தவர்களுக்கு சென்னை மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் முகாம் (PM National Apprenticeship Mela 2022) வரும் 14ம் தேதி நடைபெற இருக்கிறது.

  விவரங்கள்:

  பயிற்சி முகாம் நடைபெறும் நாள் மற்றும் நேரம்14.11.2022 அன்று காலை 9.00 மணி
  யார் கலந்து கொள்ளலாம்ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதில் கலந்து  கொள்ளலாம்
  உதவித்  தொகைதொழிற் பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக குறைந்த பட்சம் ரூ.8000/- மற்றும் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate) வழங்கப்படும்
  யார் நடத்துகிறது?சென்னை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், இந்திய அரசின் தென்மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் இணைந்து இந்த தொழிற் பழகுநர் (Apprentice) பயிற்சி முகாமினை இந்த பயிற்சி முகாமினை நடத்துகிறது.
  தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாமா?ஆம்
   ஏற்கனவே,  தொழிற் பழகுநர் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாமாகூடாது
  இடம்அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கிண்டி, சென்னை-32 வளாகம்
  விண்ணப்பம் செய்வது எப்படிwww.apprenticeshipindia.gov.in இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்
  பொது நிபந்தனைகள்முகாம் நடைபெறும் நாளன்று அசல் கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

  இந்த முகாமில், அரசு மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்க உள்ளனர்.  ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதில் கலந்து கொண்டு பலனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் வாசிக்க:  யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி... நாளை மறுநாள் நுழைவுத்தேர்வு

  Published by:Salanraj R
  First published:

  Tags: Apprentice job, Apprenticeship