COVID-19 Recruitment : மாத ஊதியம் ரூ. 60,000.. மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு

சென்னை மாநகராட்சி

26/5/2021 இரவு 8 மணிக்குள் அசல் சான்றிதளோடு விவரங்களை பதிவு செய்யவேண்டும். 27/5/2021 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் நேர்காணல் நடைபெறும்.

  • Share this:
    கொரனா தடுப்பு பணிக்காக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. மாத ஊதியம் ரூ60 ஆயிரத்தில் 115 மருத்துவ அலுவலர்கள், மாத ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் 189 செவிலியர் பணிக்கான அறிவிப்பானையை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.

    ஒராண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் 115 மருத்துவர்கள் 189 செவிலியர் பணியிடங்களுக்களை நிறப்புகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்காணும் கல்வித் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பித்து நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.விண்ணப்பித்த அனைவரும் நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.











































    நிறுவனம் சென்னை மாநகராட்சி
    பணி மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள்


     

    காலிப்பணியிடங்கள்


     

    மருத்துவ அலுவலர்கள் 115

    செவிலியர்கள் 189
    பணியிடம் சென்னை
    விண்ணப்பிக்க கடைசி தேதி 26/5/2021
    கல்வி தகுதி

    MBBS மருத்துவ அலுவலர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

    செவிலியர்கள் DGNM
    நேர்காணல் நடைபெறும் நாள் 27/05/2021
    நேர்காணல் நடைபெறும் இடம் பெருநகர சென்னை மாநகராட்சி, அம்மா மாளிகை, கூட்ட அரங்கம் (தரைத்தளம்)
    நேர்காணல் நடைபெறும் நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
    சம்பள விவரம்

    மருத்துவ அலுவலர்கள் - மாத ஊதியம் ரூ. 60,000

    செவிலியர்கள் ரூ. 15000 (ரூ.5000 கோவிட் மதிப்பூதியம் 6 மாதம் மட்டும் )

    வேலைக்கு விண்ணப்பிக்க நிபந்தனைகள் :

    • மேற்கண்ட பணி தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் கிடையாது.

    • தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேருவதற்கான சுய விவர ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

    • தேர்வு செய்யப்பட்டவர்கள் 28.05.2021 அன்று பணியில் சேரவேண்டும்.


    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


    அங்கிகரிக்கப்பட்ட கல்லூரியில் மருத்துவம் படித்தவர்கள் covid19.chennaicorporation.gov.in/covid/medical/officer/

    அங்கிகரிக்கப்பட்ட கல்லூரியில் நர்சிங் படித்தவர்கள் covid19.chennaicorporation/covid/nurse

    என்ற இணைய முகவரியில் 26/5/2021 இரவு 8மணிக்குள் அசல் சான்றிதளோடு விவரங்களை பதிவு செய்யவேண்டும். 27/5/2021 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் நேர்காணல் நடைபெறும்.
    Published by:Sankaravadivoo G
    First published: