• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • சென்னை கார்ப்பரேஷன் ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடம் அறிவிப்பு

சென்னை கார்ப்பரேஷன் ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடம் அறிவிப்பு

சென்னை கார்ப்பரேஷன் ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடம்

சென்னை கார்ப்பரேஷன் ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடம்

Chennai Corporation Recruitment 2021 : சென்னை மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் அதிகாரத்திற்கு உட்பட்டது.

  • Share this:
    மாவட்ட சுகாதார சங்கம் - திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் சென்னை மாவட்டம் , கீழ்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சி வலைத்தளத்தில் இருக்கும் விண்ணப்ப மாதிரி படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்கள் 11 மாதம் ஒப்பந்த மற்றும் தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் நிரப்பப்படும்.

    விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி - திட்ட அலுவலர் - திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம், மாவட்ட காசநோய் மையம், 26, புளியந்தோப்பு நெடுஞ்சாலை , புளியந்தோப்பு, சென்னை - 600 012. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 29/11/2021 மாலை 5.00 மணிக்குள். விண்ணப்பதாரர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.

    நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் தபால் மூலமாக தெரிவிக்கப்படும். இந்த காலி பணியிடங்கள் வகுப்பு வாத பட்டியல் அடிப்படையில் நிரப்பப்படும். சென்னை மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் அதிகாரத்திற்கு உட்பட்டது.

    வேலைக்கான விவரம் :















































    நிறுவனம் Greater Chennai Corporation
    வேலையின் பெயர் மருத்துவ அலுவலர்‌, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர், மருந்தாளுனர், கணினி இயக்குபவர்
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 89 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாத பட்டதாரிகளாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
    தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பதாரர்கள்‌ தகுதி அடிப்படையில்‌ தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்‌ தேர்விற்கு அழைக்கப்படுவர்‌.
    கல்வித்தகுதி 10வது தேர்ச்சி/ 12வது தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் MBBS/ MBA/PG Diploma/ Bachelor’s Degree/ MSW/ M.Sc/ Degree/ Diploma/ Graduate/ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ. 10,000/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை சம்பளம்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 29.11.2021
    விண்ணப்ப முறை விண்ணப்பங்கள் ( Offline) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி  திட்ட அலுவலர்‌, திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய்‌ கட்டுப்பாட்டுத்‌ திட்டம்‌, 26, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, சென்னை – 600012

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://chennaicorporation.gov.in/gcc/pdf/NTEP_Application.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் அதிகாரத்திற்கு உட்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: