COVID-19 Recruitment : சென்னை மாநகராட்சியில் பணியாற்ற டாக்டர்கள் தேவை.. எம்.பி.பி.எஸ் ஃபைனல் இயர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு

பயிற்சி மருத்துவர் பணிக்கு ரூ.40,000 மாத சம்பளத்தில் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்படும்.விருப்பம் இருப்பவர்கள் நாளை மதியம் 2மணிக்குள் gccteledoctor2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு சுயவிவரங்களோடு விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    சென்னையில் அதிகரிக்கும் கொரொனா தொற்றை கட்டுப்படுத்த மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் மாத ஊதியம் ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





























     

    நிறுவனம்
    சென்னை மாநகராட்சி
    பணி பயிற்சி மருத்துவர்கள்
    காலிப்பணியிடங்கள் 300
    விண்ணப்பிக்க கடைசி தேதி நாளை மதியம் 2மணிக்குள் gccteledoctor2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு சுயவிவரங்களோடு விண்ணப்பிக்கலாம்.
    கல்வி தகுதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.


     

    சம்பள விவரம்
    ரூ.40 ஆயிரம்

     



    வேலைக்கு விண்ணப்பிக்க நிபந்தனைகள் :

    • மேற்கண்ட பணி தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் கிடையாது.

    • பணியில் சேருவதற்கான சுய விவர ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

    • மின்னஞ்சல் மூலமாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் பயிற்சி மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுவர்

    • மின்னஞ்சல் மூலமாக பெறப்பட்ட விண்ணப்பத் தரர்களுக்கு 13.05.2021 அன்று தொலைபேசியில் நடத்தப்படும் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள் 14.05.2021 தேதி முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணி புரிய வேண்டும்.


    வழிமுறைகள் : மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டியவை :

    • சுயவிவரம்

    • இறுதி ஆண்டிற்கு முந்தைய ஆண்டிற்கான மதிப்பெண் சான்றிதழ்

    • 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

    • கல்லூரி அடையாள அட்டை


    அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
    Published by:Sankaravadivoo G
    First published: