Home /News /employment /

சென்னை மாநகராட்சியில் 60 மருத்துவப் பணியிடங்கள் : உடனே விண்ணப்பியுங்கள்

சென்னை மாநகராட்சியில் 60 மருத்துவப் பணியிடங்கள் : உடனே விண்ணப்பியுங்கள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஒப்பந்த காலத்திற்குப் பிறகு, நிரந்தர பணி நியமனத்தை விண்ணப்பதாரர்கள் கோர முடியாது.

பொது மருத்துவம், அறுவைச் சிகிச்சை, குழந்தைகள் மற்றும் மகப்பேறு சேவைகள் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களை நியமிக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. ஆர்வமும், ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலிப்பணியிடங்கள்: 60 

தேசிய நகர்புறத் திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர மாநகராட்சியின் கீழுள்ள மருத்துவமனைகளில் நிரப்படும் பணியிடங்கள் தொடர்பான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.













































பதவிகல்வித் தகுதிகாலிப்பணியிடங்கள்சம்பளம்/ மாதம்


 

மகப்பேறியல் (Obstetrics)/ மகளிர் நலவியல் (Gynecologist)
MD, (DGO) அல்லது
MBBS, DGO
990,000
குழந்தைகள் சேவைMD, (Pediatric) அல்லது
MBBS, DCH
890,000
அறுவை சிகிச்சைMBBS, MS1190,000
பொது மருத்துவம்MBBS, MD1390,000
முடவியல் (orthopedics)MBBS மற்றும்  MS in Orthopaedic390,000
பல் மருத்துவம் (Dentist )BDS, MDS1634,000

பணி ஒப்பந்த காலம் : 11 மாதங்கள்

சென்னை மாநகராட்சியின் கீழுள்ள 15 மண்டங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் பணியமர்த்தப்படலாம்.

ஒப்பந்த காலத்திற்குப் பிறகு,நிரந்தர பணி நியமனத்தை விண்ணப்பதாரர்கள் கோர முடியாது. இந்த ஆட்சேர்ப்பு சென்னை நகர சுகாதார இயக்கத்தின் கீழ்  வருகிறது என்றும் சென்னை பெருநகர மாநகராட்சியின் கீழ் வரவில்லை என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை  chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதாத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அத்துடன் சுய சான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்க பட வேண்டும்.

அனைத்து பணியிடங்களுக்கும் நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலின் போது அசல் சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் ஆதார் எண், முன் அனுபவ சான்றிதழ்  உள்ளிட்ட தகவல்களை அளிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி,

The City Health Officer,

Public Health Department,

Ripon Buildings,

Chennai – 600 003

Phone: 044 – 2561 9330

(அல்லது)

gcc2021hremployment@gmail.com  என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் சமர்ப்பிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

இந்திய மருத்துவ மாணவர்கள் தங்கள் கல்லூரிகளில் படிப்பைத் தொடர சீனா ஒப்புதல்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 09.05.2022 மாலை 5 மணி வரை.
Published by:Salanraj R
First published:

Tags: Doctor

அடுத்த செய்தி