முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை: சென்னைவாசிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்

சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை: சென்னைவாசிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்

  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் தரகு  அடிப்படையிலான நகை மதிப்பீட்டாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாவாட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே  விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்:

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

நகை மதிப்பீட்டாளர் தொழில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் (அ) நகைத் தொழிலில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் விவரங்கள்/தொடர்புக்கு bank.cccb@tn.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரியையும், 044-2345 8708 -713 என்ற தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

இந்தியக் குடும்பங்களில் தங்கம் முக்கிய அங்கமாகிவிட்டது. தங்கம் முதலீட்டு பொருளாக இருந்து வருவதால், அதற்கான தேவை குறையாமல் இருந்து வருகிறது. எனவே,  நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பெற்றவர்கள் மேற்கூறிய பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதையும் வாசிக்க: புதிதாக 10,300 ஆசிரியர்களை நியமிக்க உள்ளோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

நகை மதிப்பீட்டாளர்:

நகை மற்றும் அடகு தொழில் தொடங்கவும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தங்க நடை மதிப்பீட்டாளராக பணி புரியவும் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியை முடிப்பது நல்லது. தங்கத்தின் அடிப்படை உலோகவியல், தங்கத்தின் தரம் மற்றும் போலி நகைகளை கண்டறிதல், நிகர் எடையைக் கண்டறிதல் போன்ற விவரங்கள் இந்த பயிற்சியில் கற்பிக்கப்படும்.

8 முதல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 14 வயதைக் கடந்தவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். சென்னை கிண்டியில் உள்ள எம்எஸ்எம்இ மையத்தில் ( MSME-CFTI, Chennai) இந்த பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

First published:

Tags: Gold, Recruitment