ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்து அறநிலையத் துறையில் பல்வேறு காலியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்

இந்து அறநிலையத் துறையில் பல்வேறு காலியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு செய்திகள்

Arulmigu Siddiputhi Vinayagar and Sundarareswarar Temple: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 17.11.2022 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai |

  சென்னை ராயப்பேட்டை முத்து முதலி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வர் திருக்கோயில்  அர்ச்சகர், ஓதுவார், கணினி இயங்குபவர், மின் பணியாளர், காவலர், துப்புரவாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  காலியிட விவரங்கள்: 9

  விண்ணப்பதாரர் 01.07.2022 அன்று 18 வயது முழுமையடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

  விண்ணப்பபடிவம் மற்றும் நிபந்தனைகளை hrce.tn.gov.in என்ற இணையதளத்தினும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பணியிட விவரங்களுக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக வேலை நேரங்களில் நேரில் கேட்டுக் தெரிந்து கொள்ளலாம்.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயல் அலுவலர், அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயில், இராயப்பேட்டை சென்னை-14 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  இதையும் வாசிக்கசென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு: ரூ.30,000 வரை சம்பளம்

  விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்றின் நகல்கள், சாதிச்சான்று நகல், குடும்ப அடையாள அட்டை நகல், முன்னுரிமைக்கான சான்றின் நகல், ஆதார் அட்டை நகல், வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகல், சுயவிலாசமிட்ட ரூ.25/-க்கான தபால் தலையுடன் கூடிய உறை ஆக்கியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

  இதையும் வாசிக்கஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம்... ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் - தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 17.11.2022 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Application form

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job Vacancy, Recruitment