Home /News /employment /

மத்திய நீர்வளத்துறையில் டிரைவர் வேலை - 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய நீர்வளத்துறையில் டிரைவர் வேலை - 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய நீர்வளத்துறையில் டிரைவர் வேலை

மத்திய நீர்வளத்துறையில் டிரைவர் வேலை

CGWB Recruitment 2021 : மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிலத்தடி நீர் வாரிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிலத்தடி நீர் வாரிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரம் :















































நிறுவனம் மத்திய நீர்வளத்துறை
வேலையின் பெயர் Staff Car Driver(ordinary Grade)
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 24 காலிப்பணி இடங்கள்
வயது விவரம் 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆங்கிலம் அல்லது இந்தியில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

வாகன பழுது சரிசெய்ய தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விவரம் மாதம் ரூ.19,900 - 63,200 சம்பளம்
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2022
பணியிடம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்.
விண்ணப்ப முறை www.cgwb.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி Regional Director, Central Ground water Board, North western Region, Bhujal
Bhawan, Plot No' 38, sector-274, chandigarh-L60 019

இணையதள முகவரி மேலும் விவரங்கள் அறிய www.cgwb.gov.in இந்த லிங்கில் சென்று காணவும்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

http://cgwb.gov.in/Vacancies/Staff%20car%20Driver%20Group%20C.pdf

இந்த லிங்கில் சென்று காணவும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Job Vacancy

அடுத்த செய்தி