ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரயில்வே ஐடி துறையில் தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!

ரயில்வே ஐடி துறையில் தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!

இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே

Railway Jobs : இந்தியன் ரயில்வேவின் ஐடி துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைக் கடந்த மாதம் வெளியிட்டனர். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியன் ரயில்வே அமைச்சகத்தில் கீழ் செயல்படும் ரயில்வே தகவல் அமைப்பு மையம் தகவல் தொழில்நுட்ப பணிகளைச் செய்து வருகின்றன. இப்பணியிடங்களுக்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. நாளை (20-ம் தேதி) இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் முடிவடைகிறது. ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்
Junior Electrical Engineer4
Junior Civil Engineer1
Executive Personnel / Administration /HRD9
Executive, Finance and Accounts8
Executive, Procurement2

வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பாகக் குறைந்தபட்சம் 22 முதல் அதிகப்படியாக 28 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு மற்றும் OBC/PwBD பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உள்ளது.

சம்பளம்:

7வது CPC படி நிலை 6 விதியின் படி சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ரூ.48,852 + 38% சதவீதம் டிஏ வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்தகுதி
Junior Electrical EngineerElectrical Engineering பிரிவில் 3 ஆண்டுகள் டிப்ளமோ/ டிகிரி 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Junior Civil EngineerCivil Engineering பிரிவில் 3 ஆண்டுகள் டிப்ளமோ / டிகிரி 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Executive Personnel / Administration /HRDArts/Commerce/Science பிரிவில் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை டிப்ளமோ / MBA 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Executive, Finance and AccountsCommerce பிரிவில் முதுகலைப் பட்டம் அல்லது ஏதாவது பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முதுகலை டிப்ளமோ.
Executive, Procurementஇன்ஜீனியர் பிரிவில் 3 ஆண்டுகள் டிப்ளமோ தேர்ச்சி 60% மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்குக் கணினி வழி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : மீடியாவில் பணி... மத்திய அரசு அலுவலகத்தில் ரூ.40 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலை!

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் CSIR இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்பு தேவையான சான்றிதழ் வைத்துக்கொண்டு விண்ணப்பியுங்கள். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1200/- ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ST/PwBD/Female/Transgender/Ex-Servicemen பிரிவினருக்கு ரூ.600/- ஆன்லைனில் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி : https://cdn.digialm.com//

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 20.12.2022.

First published:

Tags: IT JOBS, Railway Jobs