ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தேர்வு கிடையாது... ரூ.2 லட்சம் வரை சம்பளம்: பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு

தேர்வு கிடையாது... ரூ.2 லட்சம் வரை சம்பளம்: பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு

ஆந்திரப் பிரதேசம் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம்

ஆந்திரப் பிரதேசம் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம்

Central Tribal University of Andhra Pradesh : ஆந்திராவில் உள்ள மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு அனுபவமுள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
Registrar1அதிகபட்சம் 57 வயதுரூ.1,44,200-2,18,200
Finance Officer1அதிகபட்சம் 57 வயதுரு.1,44,200-2,18,200
Controller of Examinations1அதிகபட்சம் 57 வயதுரு.1,44,200-2,18,200

கல்வித்தகுதி:

முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 15 ஆண்டுகள் கல்லூரி பேராசிரியராக அனுபவம் தேவை அல்லது அதற்குத் தகுதியாகக் கல்வி நிறுவனத்தில் அனுபவம் தேவை அல்லது 15 வருடத் துணை பதிவாளராக பணிபுரிந்து இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

கல்வித்தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் https://www.ctuap.ac.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தைத் தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://ctuapnt.samarth.edu.in/

Also Read : நாள் ஒன்றுக்கு ரூ.770 ரூபாய் சம்பளத்தில் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிப்பது எப்படி?

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Recruitment Cell

Central Tribal University of Andhra Pradesh

Kondakarakam, Vizianagaram (AP) 535003.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 23.01.2023

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Government jobs, Teaching