உளவுத்துறை போலீசாக விருப்பமா? 1054 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய உளவுத் துறை போலீஸ் படைகளில் ஒன்று இன்டலிஜென்ஸ் பீரோ. இதில் செக்யூரிட்டி அசிஸ்டென்ட் (குரூப் சி) பணிகளுக்கு 1054 பேர் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

உளவுத்துறை போலீசாக விருப்பமா? 1054 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய உளவுத் துறையில் போலீசாக வாய்ப்பு
  • News18
  • Last Updated: November 5, 2018, 7:51 PM IST
  • Share this:
மத்திய உளவுத் துறை போலீஸ் பிரிவில் 1,054 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நவம்பர் 10.

மத்திய உளவுத்துறை போலீஸ் (CIA- central intelligence agency) படைகளில் ஒன்று இன்டலிஜென்ஸ் பீரோ. இதில் செக்யூரிட்டி அசிஸ்டென்ட் (குரூப் சி) பணிகளுக்கு 1054 பேர் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதில் மாநில வாரியாக பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக டெல்லிக்கு 228 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழகத்திற்கு 40 இடங்கள் உள்ளன.

இட ஒதுக்கீடு வாரியாக: 1,054 பணியிடங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 620 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 187 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 160 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 87 இடங்களும் இருக்கின்றன.


வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், பணியிடங்கள் அமைந்துள்ள மண்டல மொழியை நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும்.கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் தங்களது விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நவம்பர் 10. தேர்வுக் கட்டணமான ரூ.50 செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.mha.gov.in, www.ncs.gov.in, https://mha.gov.in/sites/default/files/intermediate_page231020181557.pdf ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.

Also watch

First published: November 5, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading