மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள பணி இடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் துணை இயக்குநர், ஆய்வு அலுவலர், இளம் ஆய்வு அலுவலர் ஆகிய கல்வி சார்ந்த பணி யிடங்களுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
அதேபோல் கல்வி சாரா பணியிடங்களுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தனி செயலர், உதவி நூலகர், சுருக்கெழுத்தர், அலுவலக மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காணும் பதவிகளுக்கு விண்ணப்பிக்க
https://www.cict.in/ என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.