ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

10ம் வகுப்பு தேர்ச்சி: மத்திய காவல் படையில் 787 கான்ஸ்டபிள் பணியிடங்கள் - உடனே விண்ணப்பியுங்கள்

10ம் வகுப்பு தேர்ச்சி: மத்திய காவல் படையில் 787 கான்ஸ்டபிள் பணியிடங்கள் - உடனே விண்ணப்பியுங்கள்

மத்திய தொழிற்  காவல் படை

மத்திய தொழிற் காவல் படை

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தின் மூலம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியில் ((equivalent education) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

Recruitment of Constable in CISF: மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 787 பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளை மறுநாளுடன் (டிசம்பர்-20 )முடிவடைகிறது. ஆர்வமும், தகுதியும் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காலியிடங்கள்: 787

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தின் மூலம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியில் ((equivalent education) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ . 21,700  முதல் 69,100 வரை 

வயது வரம்பு : இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க 01.08.2022 அன்று 18க்கு மேலும், 23க்கு கீழும் இருக்க வேண்டும். பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் ஐந்து ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும். ஓபிசி பிரிவினர் 3 ஆண்டுகள் வரை சலுகை பெற தகுதியுடைவர்கள்.

இதையும் வாசிக்க:  டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஷாக்: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஏமாற்றம்

விண்ணப்பம் செய்வது எப்படி?

www.cisfrectt.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் வண்ண பாஸ்போர்ட் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அது தேர்வு அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 3 மாதத்துக்கு மேல் பழையதாக இருக்க கூடாது என்றும் கூறப்படுகிறது.

தெரிவு செய்யப்படும் முறை: தெரிவு முறை 2 நிலைகளைக் கொண்டுள்ளது.

முதலில், உடல்தகுதித் தேர்வு, உடல்திறன் போட்டிகள், தகுதி ஆவணங்கள் சரிபாரிப்பு, தொழில்முறை தேர்வுகள் ( Physical Standard Test/Physical Efficiency Test, Documentation & Trade Test)

இதில், தகுதி பெரும் விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். தொழிற்திறன் தேர்வு, எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும்.

இதையும் வாசிக்க: எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்...வேலூர் சிறையில் ரூ.50000 சம்பளத்தில் வேலை!

விண்ணப்பக் கட்டணம்:ரூ .100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், மகளிர் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

RECRUITMENT OF CONSTABLE/TRADESMEN - 2022 IN CISF

First published:

Tags: Central Government Jobs