மத்திய அரசின் கூடுதல் செயலர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

news18
Updated: June 10, 2018, 7:24 PM IST
மத்திய அரசின் கூடுதல் செயலர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
மத்திய அரசில் கூடுதல் செயலர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.
news18
Updated: June 10, 2018, 7:24 PM IST
நாட்டில் முதல்முறையாக மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் கூடுதல் செயலாளர்கள் பதவிக்கு தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி வரும் திறமை வாய்ந்தவர்களை மத்திய அரசுப் பணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் புதிய திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொதுத் துறை மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 10 பேர் மத்திய அரசின் முக்கிய அமைச்சகங்களில் கூடுதல் செயலாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

வருவாய் துறை, நிதித் துறை, விவசாயத் துறை, சாலைப் போக்குவரத்து துறை, பொருளாதார விவகாரங்கள் துறை, கப்பல் போக்குவரத்து துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, விமானப் போக்குவரத்து துறை, வர்த்தகத் துறை ஆகிய துறைகளில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தப் பணியிடங்களுக்கான தகுதிகள், விதிமுறைகள்: விண்ணப்பதாரர்கள் ஜூலை மாதம் முதல் தேதி நிலவரப்படி, குறைந்தது 40 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் கல்வித் தகுதி இருப்பது சிறப்பு.

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.  தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கூடுதல் செயலாளர்களாக 3 ஆண்டுகளுக்கு பணியமர்த்தப்படுவார்கள். தேவைப்படும் பட்சத்தில் பணி நியமனத்துக்கான ஒப்பந்தத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க வாய்ப்புண்டு.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தது ரூ. 1.44 லட்சம் முதல் ரூ. 2.18 லட்சம் வரை கிடைக்கும். மேலும்,  இதர படிகள் உள்ளிட்ட பிற சலுகைகள் உள்ளிட்டவையும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: June 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626