10 மற்றும் 12-ம் வகுப்பு தகுதியுடையவர்களுக்கு மத்திய அரசில் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுதினமே கடைசி நாள் என்பதால் தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் உடடினடியாக விண்ணப்பிக்கவும்.
மத்திய அரசின் சிம்கோ நிறுவனம் (South India Multi-State Agriculture Co-Operative Society Limited (SIMCO)) அலுவலக உதவியாளர், சேல்ஸ்மேன், சூப்பர்வைசர், அக்கவுன்டன்ட் மற்றும் கிளை மேலாளர் ஆகிய பணியிடங்களுக்கான 48 காலியிடங்களை சமீபத்தில் அறிவித்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுதினம் கடைசி நாளாகும். இதுகுறித்த விபரம் பின்வருமாறு-
நிறுவனத்தின் பெயர் |
South India Multi-State Agriculture Co-Operative Society Limited (SIMCO)
|
பணியின் பெயர் |
அலுவலக உதவியாளர், சேல்ஸ்மேன், சூப்பர்வைசர், அக்கவுன்டன்ட், கிளை மேலாளர் |
பணியிடம் |
தமிழ்நாடு |
பணியின் வகை |
மத்திய அரசுப் பணி |
விண்ணப்பிக்க கடைசி நாள் |
28.02.2022 |
இணைய தளம் |
http://simcoagri.com/ |
இதையும் படிங்க -
கால அவகாசம் நீட்டிப்பு.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு தயாராவோர் அவசியம் படிக்க...
பணியிட விபரம் மற்றும் தகுதிகள்
பணியின் பெயர் |
விபரம் |
அலுவலக உதவியாளர் |
10 காலி பணியிடங்கள் – 10/12/ஐடிஐ தேர்ச்சி |
சேல்ஸ்மேன் |
22 காலி பணியிடங்கள் – 12/ஐடிஐ/டிப்ளமோ தேர்ச்சி |
சூப்பர்வைசர்கள் |
8 காலி பணியிடங்கள் – ஏதாவது டிகிரி |
அக்கவுன்டன்ட் |
4 காலி பணியிடங்கள் – யுஜி/பிஜி டிகிரி |
கிளை மேலாளர் |
4 காலி பணியிடங்கள் – பி.ஜி. டிகிரி |
வயது வரம்பு
விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 21 வயதும் அதிகபட்சமாக 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஊதிய விபரம்
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 8,200 முதல் ரூ. 32,200 வரை மாதம் வழங்கப்படும்.
இதையும் படிங்க -
மத்திய அரசுத் துறையில் 5,000 பணியிடங்கள்.. மிஸ் பண்ணாதீங்க பாஸ்
பணியின் பெயர் |
ஊதிய விபரம் |
அலுவலக உதவியாளர் |
Rs.5,200/- to Rs.20,200/- per month
|
சேல்ஸ்மேன் |
Rs.6,200/- to Rs.26,200/- per month
|
சூப்பர்வைசர்கள் |
Rs.6,200/- to Rs.28,200/- per month
|
அக்கவுன்டன்ட் |
Rs.7,200/- to Rs.30,200/- per month
|
கிளை மேலாளர் |
Rs.8,200/- to Rs.32,200/- per month
|
தேர்வு செய்யப்படும் முறை
- எழுத்து தேர்வு
- சான்றிதழ்கள் சரிபார்ப்பு
- நேர்காணல்
விண்ணப்பம் அனுப்பும் முறை
விண்ணப்பங்கள் தபால் மூலம் மட்டுமே கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
South India Multi-State Agriculture Co-Operative Society Limited,
Head Office,
Town Hall Campus,
Near Old Bus Stand,
Vellore – 632004.
விண்ணப்பிக்கும் முறை
Step 1 : சிம்கோ இணையதளத்திற்கு செல்லுங்கள்
Step 2 : தேவைப்பட்டால் லாக் இன் செய்யுங்கள்
Step 3 : அறிவிக்கையை டவுண்லோடு செய்யுங்கள்
Step 4 : படிவங்களை நிரப்புங்கள்
Step 5 : நிரப்பியதை சரிபார்த்து மேற்கண்ட முகவரிக்கு அனுப்புங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.