ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

நீங்கள் சட்டம் மற்றும் கால்நடை அறிவியல் படித்தவரா? மத்திய அரசில் உங்களுக்கு வேலை...உடனே விண்ணப்பியுங்கள்...

நீங்கள் சட்டம் மற்றும் கால்நடை அறிவியல் படித்தவரா? மத்திய அரசில் உங்களுக்கு வேலை...உடனே விண்ணப்பியுங்கள்...

மத்திய அரசு வேலைவாய்ப்பு

மத்திய அரசு வேலைவாய்ப்பு

சட்டம் மற்றும் கால்நடை அறிவியல் படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சட்டம் மற்றும் கால்நடை அறிவியல் படித்தவர்களுக்கு மத்திய அரசில் வழக்கறிஞர் மற்றும் கால்நடை அதிகாரி வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  இந்த வேலைக்கான விண்ணப்பிக்கும் முறை, தகுதி மற்றும் கடைசி நாள் போன்றவற்றைக் கீழ் வருமாறு காண்போம்.

  1. வழக்கறிஞர் ( மோசடி குறித்து விசாரணை அதிகாரி) Prosecutor (Fraud investigation Officer):

  காலியாக உள்ள இடங்கள் 12
  காலி இடங்கள் நிரப்பப்படும் பிரிவுபொது - 7, ஒபிசி -2, எஸ்சி - 1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர் - 1
  சம்பளம்7வது ஊதியக்குழு விதிமுறைப் படி வழங்கப்படும்
  வயது வரம்பு30 வயதிற்குள் இருக்க வேண்டும்

  மத்திய அரசின் வழக்கறிஞர் பணிக்கான தகுதி:

  ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் பி.எல் முடித்து ஒரு வருடப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 5 வருட ஒருங்கிணைந்த சட்டப் பட்டப்படிப்புடன் 2 வருடப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  2. கால்நடை அதிகாரி ( Veterinary officer):

  காலியாக உள்ள இடங்கள் 10 இடங்கள்
  காலி இடங்கள் நிரப்புவதற்காகப் பிரிவுஎஸ்சி-1, எஸ்டி -1, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-3
  சம்பளம்7வது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்
  வயது வரம்பு35 வயதிற்குள் இருக்க வேண்டும்

  மத்திய அரசின் கால்நடை அதிகாரி பணிக்கான தகுதி:

  கால்நடை அறிவியல் (B.V.Sc) பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று மாநில/ தேசிய கால்நடை அறிவியல் கவுன்சிலில் படிப்பைப் பதிவு செய்திருக்க வேண்டும்.

  Also Read : +2 பாஸ் ஆனாலே போதும்.. குழந்தைகள் நலக்குழுமத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணி!

  விண்ணப்பிக்கும் முறை:

  இந்த பணிக்காக www.upsconline என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

  விண்ணப்பிக்கக் கடைசி நாள்:

  மத்திய அரசின் வழக்கறிஞர் மற்றும் கால்நடை அதிகாரி பணிக்காக விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.10.2022.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Government jobs, Jobs