ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மாதம் ரூ.69,810 வரை சம்பளம்.. மத்திய அரசு வங்கியில் வேலை - விண்ணப்பிக்க அவகாசம் நீடிப்பு!

மாதம் ரூ.69,810 வரை சம்பளம்.. மத்திய அரசு வங்கியில் வேலை - விண்ணப்பிக்க அவகாசம் நீடிப்பு!

இந்தியன் எக்ஸிம் வங்கி

இந்தியன் எக்ஸிம் வங்கி

மத்திய அரசிக்குச் சொந்தமான இந்தியன் எக்ஸிம் வங்கியில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மத்திய அரசிக்குச் சொந்தமான இந்தியன் எக்ஸிம் வங்கியில் (Indian Exim Bank) மேனேஜர் மற்றும் மேனேஜ்மண்ட் டிரைனி பணிகளுக்காக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான தகுதிகள், தேவைகள், விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.

  வங்கி பணிக்காக விண்ணப்பிக்கக் கடைசி நாள் 04.11.2022 இருந்த நிலையில் புதிய அறிவிப்புப் படி 18.11.2022 தேதிக்கு அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். மேலும் முன்னதாகவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவை இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  இந்தியன் எக்ஸிம் வங்கி பணிக்கான விவரங்கள்:

  1. பணியில் பெயர் : மேனேஜர் (Manager) :

  காலியிடங்கள்4 (எஸ்டி-2,ஒபிசி-2)
  சம்பள விகிதம்ரூ. 48,170 - 69,810.
  வயதுஎஸ்டி பிரிவினர்கள் 40 வயதிற்குள்ளும், ஒபிசி பிரிவினர் 35 இருந்து 38 ஆக நீடிக்கப்பட்டுள்ளது.
  கல்வித்தகுதிபி.எல் அல்லது எல்.எல்.பி பட்டம் பெற்றுக் குறைந்தது 6 வருட வழக்கறிஞர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல் / ஐடி/ எலக்ட்ரானிக் மற்றும் தொலைத்தொடர்பு பாடப்பிரிவில் பி.இ /பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்.சி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். 6 வருடப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  2. பணியின் பெயர்: மேனேஜ்மண்ட் டிரைனி (Management Trainees):

  காலியிடங்கள்41 (UR -12,SC-10,ST-6,OBC-10,EWS-3)
  சம்பளம்ரூ.55,000
  வயது வரம்பு21 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  கல்வித்தகுதிCA/MBA/PGDBA போன்ற ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்து 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று மேற்கண்ட கல்வித்தகுதியைப் பெற்றிருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

  தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை உட்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெறும்.

  எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி:

  நவம்பர் - டிசம்பர் - 2022.

  நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி : ஜனவரி 2023.

  எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வின் அடிப்படையில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட மேனேஜ்மண்ட் டிரைனி பணிக்குரியவர்களுக்கு உதவித்தொகையுடன் 1 வருட பயிற்சி வழங்கப்படும். பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் டிபியுடி மேனேஜர் பணி வழங்கப்படும்.

  விண்ணப்பக் கட்டணம்:

  பொது/ OBC பிரிவினருக்கு ரூ. 600. SC/ST/PWD/EWS பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.100 கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

  Also Read : தேர்வு கிடையாது.. அரசு மருத்துவமனையில் டேட்டா என்ட்ரி வேலை.. - BECIL அறிவிப்பு!

  விண்ணப்பிக்கும் முறை:

  www.ibpsonline.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லையின் விண்ணப்பிக்க வேண்டும்.

  விண்ணப்பிக்க நீடிக்கப்பட்டக் கடைசி நாள் : 18.11.2022.

  தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மேலும் தகவலுக்கு https://www.eximbankindia.in/careers அணுகவும்.

  விண்ணப்பிக்க நீடிக்கப்பட்ட அறிவிப்பு

  Published by:Janvi
  First published:

  Tags: Bank Jobs, Central Government Jobs