CEN 01/2019 Exam Results: இந்திய ரயில்வே துறையில், தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகளில் உள்ள ரயில் நிலைய அதிகாரி, போக்குவரத்து உதவியாளர் பதவிகளுக்கான இரண்டாம் நிலை தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த பட்டியலில், 4000க்கும் மேற்பட்ட பெண் தேர்வர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய ரயில்வே துறையின் பல பிரிவுகளில் 1.4 லட்சம் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை முன்னதாக ரயில்வே வாரியம் வெளியிட்டது. CEN 03/2019 (Ministerial & Isolated Categories) ஆட்சேர்ப்புக்கான தேர்வு முதற்கட்டமாகவும், CEN 01/2019 (NTPC categories) ஆட்சேர்ப்புக்கான தேர்வு இரண்டாவது கட்டமாகவும், CEN No. RRC- 01/2019 ஆட்சேர்ப்புக்கான தேர்வு மூன்றாவது கட்டமாகவும் நடைபெற்றது.
இதில், தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகளில் (CEN 01/2019 (NTPC categories) ரயில் நிலைய அதிகாரி (Station Masters) பதவிக்கான நிலை 6-ல் 7124 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதே போன்று, போக்குவரத்து உதவியாளர் பதவிக்கான நிலை 4-ல் 161 இடங்கள் உள்ளன.
இதற்கிடையே, நிலை 6 மற்றும் நிலை 4 பணிகளுக்கான இரண்டாவது நிலை எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நாடு முழுவதும் 25 மாநிலங்களில் உள்ள 111 நகரங்களில் அமைந்துள்ள 156 மையங்களில் நிலை 6 தேர்வு நடத்தப்பட்டது. அதே போன்று, 17 மாநிலங்களில் உள்ள 56 நகரங்களில் அமைந்துள்ள 89 மையங்களில் நிலை 4 தேர்வு நடத்தப்பட்டது. கணினி அடிப்படையில் நடத்தபபட்ட இத்தேர்வுகளில், ஒட்டுமொத்தமாக, 1,28,708 விண்ணப்பதாரர்கள் தேர்வெழுதினர்.
இதையும் வாசிக்க: 14 ஆண்டுகளுக்குப் பிறகு புத்துயிர் பெறத் தொடங்கும் அர்ச்சகர் பயிற்சி வகுப்புகள்
இந்நிலையில், இந்த இரண்டாவது நிலை எழுத்துத் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகியது. இதில், மொத்தமாக 57,117 தேர்வர்கள் கணினி திறனறிவு தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில், 4000க்கும் மேற்பட்ட பெண் தேர்வர்களும் அடங்கும். அதாவது, மொத்த எண்ணிக்கையில் பெண் தேர்வர்களின் தேர்ச்சி விகிதம் 8 சதவிகிதமாக உள்ளது.
இதையும் வாசிக்க: கருவுற்று இருந்தால் வேலைக்கு தகுதி அற்றவரா? இந்தியன் வங்கிக்கு சு.வெங்கடேசன் கண்டனம்
நிலை 6 மற்றும் 4 பிரிவுகளுக்கு அடுத்தக் கட்டமாக கணினித் திறனறிவு தேர்வு நடத்தப்படும். இதில், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் உள்ளன. இரண்டாம் நிலை எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், கணினி திறனறிவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways