இந்தியாவின் பொதுத் துறை நிறுவனமான சிமெண்ட் கார்ப்ப
ரேஷன் ஆப் இந்தியா பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: 46
உற்பத்தி, மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள 27 பொறியாளர்கள் பதவிகளுக்கும், மார்க்கெட்டிங், சட்டம், மனித வளம் உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள 19 அதிகாரிகள் பதவிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
பதவியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது, நிர்வாக காரணங்களால் அதிகரிக்கவோ, குறையவோ கூடும்.
வயது வரம்பு:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 35-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மேலும் கூடுதலாக 05 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடையவராவர்.
கல்வித் தகுதி: பொறியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தொடர்புடைய துறைகளில் பட்டதாரி பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதிகாரிகள் பதவிக்கு தொடர்புடைய துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இது, முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் நிரப்படும் பணியாகும். ஒப்பந்த காலத்திற்கு பிறகு விண்ணப்பித்தார்கள் விடுவிக்கப்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி அனுபவம்: அனைத்து பதவிகளுக்கும் சம்மந்தப்பட்ட துறைகளில் விண்ணப்பதாரர் குரைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்ப படிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை https://www.cciltd.in/ என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளின் சான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பதாரர் விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் மற்றும் கைபேசி எண் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசலிக்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்விற்கு அழைப்பு அனுப்பப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.5.2022 மாலை 5.00 மணி.
அனுப்ப வேண்டிய முகவரி:
Manager (HR),
Cement Corporation of India
Post Box No: 3061,
Lodhi Road Post Office,
New Delhi: 110003
தெரிவு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தில் குறிப்பிட்ட விபரங்கள் அடிப்படையில் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். எனவே , நேர்காணலின் போது, கல்வி, சாதி, பணி அனுபவம் மற்றும் இதர தகுதி அசல் சான்றிதழ்களுடன் செல்ல வேண்டும். தேவைப்படும் பட்சத்தில், நேர்காணலுக்கு முன்பாக எழுத்துத் தேர்வு மற்றும் குழு விவாதத் தேர்வு நடத்தப்படும்.
ஆட்சேர்ப்பு அறிவிப்பு
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், மகளிர் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.