சி.இ.எல். (CEL) நிறுவனத்தில் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு!

விண்ணப்பதாரர்கள் கேட் தேர்வுக்கு விண்ணப்பித்த பதிவு எண்ணைக் குறிப்பிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். 

news18
Updated: December 26, 2018, 3:56 PM IST
சி.இ.எல். (CEL) நிறுவனத்தில் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு!
இன்ஜினியர்களுக்கு வேலை!
news18
Updated: December 26, 2018, 3:56 PM IST
மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (சி.இ.எல்.) நிறுவனத்தில் டெபுடி இன்ஜினியர் பணிக்கு 57 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

யார் யார் விண்ணபிக்கலாம்? மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிக்கேஷன் பிரிவுகளில் பி.இ., பி.டெக். படித்து கேட் தேர்வு எழுதுபவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-12-2018 நிலவரப்படி 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் கேட் தேர்வுக்கு விண்ணப்பித்த பதிவு எண்ணைக் குறிப்பிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி டிசம்பர் 29. மேலும், விவரங்களுக்கு www.celindia.co.in என்ற வளைதளத்தைப் பார்க்கவும்.

Also watch
First published: December 26, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்