வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த திட்டமிட்டுள்ளது.
இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் 25,000-ற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். மேலும், இம்முகாமில் 10,000ற்கும் மேற்பட்ட வேலைதேடுபவர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இடம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்திலுள்ள சாணக்கியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இம்முகாம் நடைபெறவுள்ளது.
நாள்: 11.02.2022 ஆகும். காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு emjobfair@gmailcom என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 04146- 226417 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
Jobs in Chennai: சென்னையில் அதிகம் வேலைவாய்ப்புகள் தரும் துறைகள் என்னென்ன தெரியுமா?
காலி பணியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்யவுள்ள நிறுவனங்களும், தொழில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் அதிகளவில் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துளளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Recruitment