முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / வேலைவாய்ப்புடன் கூடிய அரசின் இலவச தொழில்நுட்ப பயிற்சி..!

வேலைவாய்ப்புடன் கூடிய அரசின் இலவச தொழில்நுட்ப பயிற்சி..!

தமிழ்நாடு திறன் மேம்பாடுக் கழகம்

தமிழ்நாடு திறன் மேம்பாடுக் கழகம்

TNSDC : தமிழ்நாடு திறன் மேம்பாடுக் கழகம் 100% வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பிளாஸ்டிக்ஸ் தொழில்நுட்ப பயிற்சிகளை அறிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு திறன் மேம்பாடுக் கழகம் மற்றும் மத்திய பெட்ரே கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இணைத்து இளைஞர்களுக்கு 100% வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பிளாஸ்டிக்ஸ் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குகின்றது.

இதற்கான சேர்க்கை தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தில் மிசின் ஆப்ரேட்டர் மற்றும் இன்ஜெக்சன் மிசின் ஆப்டேட்டர் பணிக்கு 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். மேலும் இப்பயிற்சியில் 8 ஆம் வகுப்பு,10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் விண்ணப்பித்துக் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின் விவரங்கள்:

பயிற்சியின் பெயர்பயிற்சி காலம்
Machine Operator Assistanat - Plastics Processing3 மாதங்கள்
Machine Operator Assistant - Injection Moulding3 மாதங்கள்

கல்வித்தகுதி:

இப்பயிற்சிக்கி 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள்

வயது வரம்பு:

18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மற்றும் 35 வயதுக்குட்பட்ட ஆண்/பெண் இருபாலரும் சேரலாம்.

குறிப்பு:

இப்பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சி காலத்தில் உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும்.

Also Read : TNPSC புதிய வேலைவாய்ப்பு : ரூ.2 லட்சத்திற்கு மேல் சம்பளத்தில் சுற்றுலா அலுவலர் பணி.!

பயிற்சியில் சேர தேவையான அசல் மற்றும் நகல் ஆவணங்கள்:

8 ஆம், 10 ஆம் அல்லது 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதல் (அசல்), பள்ளி பரிமாற்ற சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ் நகல் மற்றும் ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 5, குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தகுதியுடையவராய் இருக்க வேண்டும், தொழில் பயிற்சி நிலையங்களில் TNSDC மூலம் பயிற்சி பெறாதவராய் இருக்க வேண்டும், புதிய தொழில் துவங்குவோர் இப்பயிற்சியில் சேரலாம்.

மேலும் விவரங்களுக்கு 96002 54350/98411 26296/ 99418 44937 எண்களுக்குத் தொடர்புகொள்ளலாம்.

முன்பதிவு செய்ய வேண்டிய இணையத்தளம் : https://candidate.tnskill.tn.gov.in/

First published:

Tags: Entrepreneurship, Job, Job search