தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் தொழிற் நிறுவனங்களின் தேவைக்கேற்ப திறன் பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மத்திய இரசாயணத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிப்பேட் நிறுவனத்துடன் இணைந்து பிளாஸ்டிக் தொழில்நுட்ப பயிற்சியை அறிவித்துள்ளது. இந்த பயிற்சி வகுப்புக்கு குறைந்த இடங்களே இருப்பதால், விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இது, 100% வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சியாகும். பயிற்சி முடித்த மாணவர்கள் அனைவருக்கும் 100 வேலைவாய்ப்பினை பெற்று தரும் நோக்கில் இது அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி கட்டணத்துடன், உணவு மற்றும் தங்குமிடம் இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8ம் வகுப்புத் தேர்ச்சி,
பயிற்சியின் பெயர் | பயிற்சி காலம் |
Machine Operator Assistant-Plastic Processing | 3 மாதங்கள் |
Machine Operator Assistant-Injection Moduling | 3 மாதங்கள் |
8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணாக்கர்கள் இதில் சேரலாம்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்த, 35 வயதுக்குட்பட்ட ஆண்/பெண் இருபாலரும் இதில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான அசல் மற்றும் நகல் ஆவணங்கள்:
8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (அசல்)
பள்ளி பரிமாற்ற சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ் நகல் மற்றும் ஆதார் அட்டை நகல்.
வங்கி கணக்கு புத்தகம்.
5 பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
இந்த திறன் பயிற்சிக்கு பதிவு செய்ய https://candidate.tnskill.tn.gov.in/Candidate/Account/registration என்ற இணையதளத்தில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும், விவரங்களுக்கு 96002 54350/ 98411 26296/ 99418 44934 என்ற தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.