ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்: ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்: ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

காட்சிப் படம்

காட்சிப் படம்

Erode District Mega Job Fair: 200க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் நிறுவனங்கள் 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது.  இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள், தங்களுடைய கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சுயவிவர குறிப்புடன் செல்ல  வேண்டும்.

இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் நிறுவனங்கள் 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளதாகவும்,  படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம் என்றும் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இடம்:  ஈரோடு மாவட்டம் பெருந்துறை ரோடு, நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாள்: 21.01.2023, நேரம்: காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை.

இதையும் வாசிக்கபுதிய பரிணாமம் எடுக்கும் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள்... வேலையின்மைப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா?

First published:

Tags: Job Fair