நாடு முழுவதும் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை பற்றி அனைவரும் அறிந்திருக்க கூடும். மேலும் தற்போது கொரோனா தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில் வேலையில்லா திண்டாட்டம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் எதிர்காலத்தில் இன்னும் பல பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காக போட்டியிட உள்ளார்கள். இதுபோன்ற சமயங்களில் அனைவரும் செல்லும் பாதையை விடுத்து, நமக்கென புதிய பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது. இன்றைய இளைஞர்களில் பலர் தனியாக தொழில் செய்து பணம் ஈட்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு என்ன தொழில் செய்வது எவ்வளவு முதலீடு செய்வது என தெளிவான புரிதல்கள் இல்லை.
மேலும் அதற்கான ஆலோசனைகள் பெறுவதற்கும் சரியான வழிகாட்டுபவர்கள் யாருமில்லை.இது போன்ற ஆர்வம் உள்ளவர்களுக்காக இந்திய அஞ்சல் துறை, சுயமாக தொழில் செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் அஞ்சல் அலுவலகத்தின் கிளையை நீங்கள் துவங்குவதற்கு அஞ்சல் துறை அனுமதி அளிக்கிறது. குறிப்பிட்ட தகுதிகளையும், விதிமுறைகளையும் நீங்கள் பூர்த்தி செய்த பிறகு, அஞ்சலக கிளையை துவங்கி அதன் மூலம் அஞ்சல் அலுவலகத்தில் கிடைக்கும் அனைத்து சேவைகளையும் மக்களுக்கு வழங்க முடியும். அதன் மூலம் கிடைக்கும் தரகு தொகை மூலம் லாபம் பார்க்க முடியும்.
எவ்வாறு அஞ்சலகக் கிளையை துவங்குவது என்பதை பற்றி பார்ப்போம்.
எப்படி விண்ணப்பிப்பது?
அஞ்சலக கிளையை துவங்குவதற்கு இந்திய அஞ்சல் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான படிவத்தை அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். உங்களது விண்ணப்பம் தேர்வு செய்யப்படும் பட்சத்தில், சில விதிமுறைகள் அடங்கிய கோப்புகளில் கையொப்பம் இட்ட பிறகு வாடிக்கையாளர்களுக்கு அஞ்சல் துறையின் சேவைகளை நீங்கள் அளிக்க முடியும்.
அஞ்சலகக் கிளை துவங்குவதற்கான தகுதிகள் என்ன?
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரோ அல்லது அவரது குடும்பத்தாரோ அல்லது உறவினர்களோ இந்திய அஞ்சல் துறையில் பணியில் இருப்பவராக இருத்தல் கூடாது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்:
நீங்கள் அஞ்சலக கிளை அலுவலகத்தை அமைக்க விரும்பினால் பாதுகாப்பு வைப்பு தொகையாக ரூ. 5,000 ரூபாயை முதலில் செலுத்த வேண்டும்.
எவ்வளவு வருமானம் கிடைக்கும்,?
இந்த வேலையில் உங்களுக்கென திட்டமிடப்பட்ட நிலையான சம்பளம் எதுவும் கிடைக்கப் பெறாது. கிளையின் உரிமையாளர்கள் அவர்கள் அளிக்கும் சேவையின் அடிப்படையில், கிடைக்கும் லாபத்தில் தரகு தொகையாக சதவீத அடிப்படையில் லாபம் பிரித்து வழங்கப்படும். அதாவது எந்த அளவிற்கு திறமையாக வேலை பார்க்கிறோமோ அந்த அளவிற்கு லாபம் அதிகரிக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Business Idea, Post Office, Tamil Nadu