Rural Self Employment Scheme: மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (Rural Self Employment Training Institutes) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முன்னோடி வங்கி மூலம் (LEAD Banks) பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவை ஊக்கப்படுத்திட வங்கி கடன் இணைப்பு வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கப்படுகிறது
இந்த திட்டத்தின் கீழ், ஊரக இளைஞர்களுக்கு சுயவேலை செய்யவும், தொழில்களை தொடங்கவும் மாவட்டத்திற்கு ஒரு பயிற்சி நிலையத்தையாவது தொடங்க வேண்டும் என்பது வங்கிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் CCTV இன்ஸ்டாலேஷன் & சர்வீஸிங் பயிற்சி மற்றும் பெண்களுக்கான சணல் பை தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
எவ்வித கட்டணமும் இன்றி 100 சதவீதம் செய்முறை பயிற்சி, சீருடை, மூன்று வேளையும் உணவு, தேதி, விடுதியில் தங்கி படிக்கும் வசதி, யோகா பயிற்சி மற்றும் பயிற்சி சான்றிதழ் உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். திறன் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் தொழில் தொடங்குவதற்கும் வங்கி கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட பயிற்சிக்கு வரும் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், 18ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என்றும் ஆட்சியரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விருப்பும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: எழுதப்படிக்க தெரிந்தால் போதும்.
தேவையான ஆவணங்கள்: ஆதார் கார்டு நகல், ரேசன் கார்டு நகல், மாற்று சான்றிதழ் நகல் (TC), 100 நாள் வேலை அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4, வங்கி கணக்குபுத்தக நகல், இப்பயிற்சிகளுக்கு முன்பதிவுகள் செய்ய தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள்: 9944850442, 7539960190, 9626644433
மேலும் விவரங்களுக்கு, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஊரக சுய வேலைவாய்ப்பு பின்புறம்). திருச்சி மெயின் ரோடு பயிற்சி நிறுவனம் (RTO அலுவலகம் பின்புறம்). கீழப்பழூர். அரியலூர்-621707. 04329-250173 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: சுயதொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு அரிய வாய்ப்பு : மிஸ் பண்ணீடாதீங்க..!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.