Canara Bank Recruitment 2021 | கனரா வங்கியில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

வங்கி

தலைமை டிஜிட்டல் அதிகாரி பதவிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆஃப்லைன் மோடில் 30 ஜூன் 2021 அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கலாம்.

  • Share this:
    ஒப்பந்த அடிப்படையிலான தலைமை டிஜிட்டல் அதிகாரி (Chief Digital Officer) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை, கனரா வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளமான canarabank.com வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்கள் கனரா வங்கி அறிவித்துள்ள தலைமை டிஜிட்டல் அதிகாரி பதவிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆஃப்லைன் மோடில் 30 ஜூன் 2021 அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கலாம்.

    பதவி: தலைமை டிஜிட்டல் அதிகாரி (Chief Digital Officer)

    விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி: 30 ஜூன் 2021

    பதவி எண்ணிக்கை: 01

    கனரா வங்கி அலுவலர் பதவிகளுக்கான தகுதி..

    கல்வி தகுதி: B.E./ B.Tech மற்றும் MBA மற்றும் திட்ட நிர்வாகத்தில் சான்றிதழ் (Certification in Project Management - PMP)

    அனுபவம்: BFSI துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மற்றும் தற்போது ஸ்கேல் IV பிரிவு / தலைமை மேலாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட அல்லது அதற்கு சமமான பதவியில் பணிபுரிய வேண்டும்.

    கனரா வங்கி அலுவலர் பதவிகளுக்கான தேர்வு செயல்முறை (Selection Process for Canara Bank Officer Posts):

    * பொதுவாக ஷார்ட் லிஸ்டிங்கானது (நடத்தப்பட்டால்) ஆவணங்கள் / சான்றிதழ்கள் / சான்றுகள், ஒரு நபரின் குவாலிஃபிகேஷன் /போஸ்ட் குவாலிஃபிகேஷன் அனுபவத்தை உறுதிப்படுத்த விண்ணப்பதாரரால் சமர்ப்பிக்கப்பட்டவை போன்றவற்றின் அடிப்படையில் இருக்கும். ஃபைனல் செலக்ஷனானது நேர்முகத்தேர்வில் குறிப்பிட்ட விண்ணப்பதாரரால் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும்.

    கனரா வங்கியின் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு?

    1. முதலில் விண்ணப்பதாரர்கள் கனரா வங்கியின் அதிகாரபூர்வ வெப்சைட்டிற்குள் www.canarabank.com சென்று, பின் Careers -> Recruitment பகுதியை கிளிக் செய்ய வேண்டும். Recruitment Project - 1/2021 - Chief Digital Officer on Contract Basis (ரெக்ரூட்மென்ட் ப்ராஜெக்ட்- 1/2021 - ஒப்பந்த அடிப்படையிலான தலைமை டிஜிட்டல் அதிகாரி) என்ற லிங்கை கிளிக் செய்து குறிப்பிட்ட இந்த பதவிக்கான விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

    2. வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான விவரங்களை டவுன்லோட் செய்த விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் நன்றாக ஓட்டப்பட்டு விண்ணப்பதாரர் கையொப்பம் போட வேண்டும். கூடவே அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கான தகுதியை நிரூபிக்கும் வகையில் ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல்களை (self attested photo copies of documents ) இணைக்க வேண்டும்.

    3. மேற்கூறியபடி முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஆவணங்களின் நகல்களுடன் (சுய சான்றளிக்கப்பட்ட) Application for Chief Digital Officer on Contract Basis என்று கவரின் முன் பகுதியில் குறிப்பிட்டு ரிஜிஸ்டர்ட் போஸ்ட் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் வங்கியின் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

    The Senior Manager Canara Bank Recruitment Cell,
    H R Wing Head Office,
    112, J C Road,
    Bengaluru - 560002

    விண்ணப்ப கட்டணம்:

    எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூபிடி / பெண்கள் ஆகியோருக்கு ரூ .118 / - (அறிவிப்பு கட்டணம் மட்டுமே; ஜிஎஸ்டி 18% அடங்கும் )

    மற்ற அனைவரும் - ரூ. 1180 / - (ஜிஎஸ்டி 18% அடங்கும்)
    Published by:Vijay R
    First published: