ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

கனரா பேங்கில் 800 புரபேஷனரி அதிகாரி பணியிடங்கள்

கனரா பேங்கில் 800 புரபேஷனரி அதிகாரி பணியிடங்கள்

கனரா வங்கி

கனரா வங்கி

மொத்தமுள்ள 800 பணியிடங்களில் பொதுப் பிரிவுக்கு 404 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 216 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 120 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 60 இடங்களும் உள்ளன.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் 800 புரபேஷனரி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நவம்பர் 13.

இட ஒதுக்கீடு அடிப்படையில்: மொத்தமுள்ள 800 பணியிடங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 404 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 216 இடங்களும், எஸ்.சி.பிரிவினருக்கு 120 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 60 இடங்களும் உள்ளன.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வங்கி-நிதி பணிகள் சார்ந்த ஓராண்டு டிப்ளமா பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள்.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-10-2018 நிலவரப்படி 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் வாய்ந்தவர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இதற்கான கடைசி தேதி நவம்பர் 13.

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 708 (ஜி.எஸ்.சி. சேர்த்து) செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ. 118-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.canarabank.com, https://canarabank.com/media/8121/rp-1-2018-web-advertisement-english-22102018.pdf ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.

Also watch

Published by:DS Gopinath
First published:

Tags: Canara Bank, Job Vacancy