ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC க்கு தற்காலிக தலைவர் அறிவிப்பு

TNPSC க்கு தற்காலிக தலைவர் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

சென்னையைச் சேர்ந்த சி.முனியநாதன்  2010 பேட்ச்  ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். நாகை மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர்,தொழிலாளர் நலத்துறை ஆணையர் உட்பட பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  டிஎன்பிஎஸ்சி  தலைவராக இருந்த பாலச்சந்திரன் ஓய்வு பெற்றதையடுத்து தற்காலிக பொறுப்புதலைவராக சி.முனியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக இருந்த  அருள்மொழி ஐ.ஏ.எஸ். கடந்த 2020ம் ஆண்டு ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய தலைவராக பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டார்.  தஞ்சாவூரைச் சேர்ந்த பாலச்சந்திரன்  பழனி துணை ஆட்சியராக 1986 ஆம் ஆண்டு தனது பணியினை தொடங்கினார். 1994-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் தமிழ்நாடு பிரிவில் நியமனம் செய்யப்பட்டார்.

  தருமபுரி, கன்னியாகுமரி, ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் ஆட்சித் தலைவராக பணிபுரிந்துள்ளார். பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் வயது அடிப்படையில். கடந்த 9ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.

  புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை, ஏற்கனவே TNPSC உறுப்பினராக இருந்து வரும் சி.முனியநாதன் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  கடந்த ஆண்டு ஜூலை மாதம்,  முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், அருள்மதி, ராஜ்மரியசூசை ஆகியோர் டிஎன்பிஎஸ்சியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டனர்.

  இதையும் படிக்க: பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் மேற்பார்வையாளர் பணி: ஏதேனும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

  சென்னையைச் சேர்ந்த சி.முனியநாதன்  2010 பேட்ச்  ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். முதுகலை பொருளாதாரம் உள்ளிட்ட நிதி சார்ந்த படிப்புகளைப் பயின்ற முனியநாதன், நாகை மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர்,தொழிலாளர் நலத்துறை ஆணையர் உட்பட பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: TNPSC