முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / தமிழக கல்வித் துறையில் ரூ.2,05,700 சம்பளத்தில் வேலை... இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்..TNPSC அறிவிப்பு!

தமிழக கல்வித் துறையில் ரூ.2,05,700 சம்பளத்தில் வேலை... இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்..TNPSC அறிவிப்பு!

நிதியாளர் பணி

நிதியாளர் பணி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழ்நாடு கல்விப் பணிகளில் அடங்கிய பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழ்நாடு கல்விப் பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவிக்கான 5 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:

பணியின் பெயர்தமிழ்நாடு கல்விப் பணிகள்
பதவியின் பெயர்நிதியாளர்
காலிப்பணியிடங்கள்5
சம்பளம்ரூ.56,100 முதல் 2,05,700 வரை

வயது வரம்பு :

SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது 37-க்குள் இருக்க வேண்டும். மற்ற பணியாளர்களுக்கு அதிகபட்ச வயதானது 32க்குள் இருக்க வேண்டும்.

நிதியாளர் பணிக்கான கல்வித் தகுதி:

பொது நிர்வாகத்தில் முதுகலை (M.A.Public Administration) பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MBA) நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேரடி ஆட்சேர்ப்பு படி கணினி வழி தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தேர்வு நிலையங்கள் அமைக்கப்படும்.

தேர்வு கட்டணம்:

பதிவு கட்டணம் – ரூ .150/-

தேர்வு கட்டணம்– ரூ.200/-

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

Also Read : மத்திய அரசின் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெடில் பயிற்சியுடன் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

விண்ணப்பிக்க வேண்டிய ஆன்லைன் முகவரி : https://apply.tnpscexams.in/

முக்கிய நாட்கள்:

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்11.11.2022
விண்ணப்பிக்கக் கடைசி நாள்10.12.2022
விண்ணப்பம் திருத்தம் செய்ய இயலும் நாள்15.12.2022 - 17.12.2022
விண்ணப்பத்தில் இணையத்தில் ஆவணங்கள் மாற்றம் / பதிவேற்றம் செய்யக் கடைசி நாள்26.02.2023

மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Education department, Jobs, Tamil Nadu Government Jobs