ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

PNB Job Alert | பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பம் செய்வது எப்படி, தகுதிகள் என்ன?

PNB Job Alert | பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பம் செய்வது எப்படி, தகுதிகள் என்ன?

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

PNB Job Alerts | கல்வித் தகுதி, வயது தகுதி போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  பஞ்சாப் நேஷனல் வங்கியில் Specialist Officers (SO) பணியில் 145 இடங்கள் காலியாக உள்ளன என்று அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ள ஆர்வலர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.pnbindia.in/ வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  காலிப்பணியிட விவரங்கள்:

  மேலாளர் (ரிஸ்க்) - 40 காலியிடங்கள்

  மேலாளர் (கிரெடிட்) - 100 காலியிடங்கள்

  மூத்த மேலாளர் - 5 இடங்கள்

  வேலைவாய்ப்பு தொடர்புடைய முக்கிய தேதிகள்:

  பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் ரெஜிஸ்டிரேஷன் செய்யும் வாய்ப்பு ஏப்ரல் 22ம் தேதி தொடங்குகிறது. ஆன்லைன் ரெஜிஸ்டிரேஷன் செய்வதற்கான கடைசி தேதி 2022 மே 7ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி 2022 ஜூன் 12ம் தேதி ஆகும்.

  கல்வித் தகுதி:

  ஒவ்வொரு பணியிடத்திற்கும் ஒவ்வொரு கல்வித் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே, பணி ஆர்வலர்கள், தாங்கள் விண்ணப்பிக்கும் வேலைக்கு தொடர்புடைய கல்வித் தகுதி என்று https://www.pnbindia.in/Recruitments.aspx இணைப்பில் உள்ள விரிவான அறிவிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அறிவிக்கை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

  வயது வரம்பு:

  பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள அனைத்துக் காலிப் பணியிடங்களுக்கும் விண்ணப்பம் செய்வதற்கான குறைந்தபட்ச வயது தகுதி 25 ஆகும். அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பதாரர்களின் வயது தகுதி என்பது 01/01/2022 தேதியின்படி கணக்கீடு செய்யப்படும். வயது வரம்பில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள் விலக்கு அளிக்கபடும். அதுவே இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு 5 ஆண்டுகளும், 1984ஆம் ஆண்டு கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கபடும்.

  பணி அனுபவம்:

  தொடர்புடைய கல்வித் தகுதியை முடித்துள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் தொடர்புடைய துறை சார்ந்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது தனியார் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  Read More | சென்னைப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி

  விண்ணப்பக் கட்டணம்:

  பட்டியலினத்தவர், பழங்குடியினர் பிரிவுகளை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் ஆகியோர் தலா ரூ.50 மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்தினால் போதுமானது. மற்ற பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் தலா ரூ.850 மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.

  தேர்வு முறை:

  கல்வித் தகுதி, வயது தகுதி போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Banking jobs, Job, Job vacancies