முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / 100 நாள் வேலைத் திட்டத்துக்கு சிக்கல்?! நிதி குறைந்ததால் கிராமப்புற வேலைவாய்ப்பு குறையுமா?

100 நாள் வேலைத் திட்டத்துக்கு சிக்கல்?! நிதி குறைந்ததால் கிராமப்புற வேலைவாய்ப்பு குறையுமா?

காட்சிப் படம்

காட்சிப் படம்

கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலத்தில், இந்த 100 நாள் வேலைத் திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரங்களில் முக்கிய பங்கு வகித்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

2023-24 நிதியாண்டின் மத்திய அரசு, மகாத்மா காத்தி  100 நாள் வேலை திட்டத்த்துக்கு ரூ. 60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, ரூ.73,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது 21.6% குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.

100 நாள் வேலைத் திட்டம் என்பது, கிராமப்புறங்களில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் கூலி வேலைக்கான உத்தரவாதத்தை வழங்குகிறது. மேலும், இந்த திட்டம் என்பது தேவைக்கேற்ப திட்டமாகும் (Demand Based ) இந்த திட்டத்தின் கீழ்,  ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாத்தை இந்த திட்டம் அளிக்கிறது. 100 நாட்கள் வேலை தர அரசு (பஞ்சாயத்து அமைப்புகள்) தவறினால் , பாதிக்கப்பட்டவருக்கு முதல் 30 நாட்களுக்கு சம்பளத்தில் கால் பங்கும், மேலும் தவறினால் பாதி ஊதியத்தை அபராதமாக அரசு தர வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலத்தில், இந்த 100 நாள் வேலைத் திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரங்களில் முக்கிய பங்கு வகித்தது. பொருளாதார மந்தநிலை காரணமாக,    வேலை கோரும் குடும்பங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. தற்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு,    விவசாய பொருளாதார வளர்ச்சி அதிகரித்த காரணத்தினால், 100 நாள் வேலை திட்டத்தின் தேவை குறையத் தொடங்கியுள்ளது.

100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், 2022-23 நிதியாண்டில் வேலை கோட்போரின் எண்ணிக்கை கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு மீண்டும் செல்ல தொடங்கியுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நிதி ஒதுக்கீடு கடுமையாக குறைப்பு:

100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியின வகுப்பினர், அனைத்து பிரிவுகளையும் சார்ந்த    பெண்களே அதிகளவு பயனடைந்து வருகின்றனர். உதாரணமாக, தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளில், கிட்டத்தட்ட 85-90% பேர் பெண்களாக உள்ளனர். அதே போன்று, தேசிய அளவில், உருவாக்கப்பட்ட வேலை நாட்களில், சுமார் 57.19% வேலைகள் பெண்களுக்கு தரப்பட்டுள்ளன. எனவே, இந்த நிதியாண்டில்  100 நாள் வேலைத் திட்டத்துக்கு முறையாக செயல்படுத்த, ஊதியம் மற்றும் பொருள்கள் வழங்குவதற்கான நிதியை அதிகப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில்,  100 நாள் வேலை திட்டத்துக்கு 21.6% குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கருத்து தெரிவித்த விசிக எம்,பிரவிக்குமார் , "100 நாள் வேலைத் திட்டம் என அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கடுமையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது  என்று தெரிவித்தார்.

மேலும், 2021 - 22 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அந்தத் திட்டத்திற்கு 98,467.85 கோடி ஒதுக்கப்பட்டது, 2022-23 பட்ஜெட்டில் அது 73 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டது. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அதற்கான நிதியை 60 ஆயிரம் கோடியாகக் குறைத்திருக்கிறார்கள்.

100 நாள் வேலை திட்டம் என்று அது அழைக்கப்பட்டாலும் மிகக் குறைவாக நிதி ஒதுக்கப்படுவதால் இதில் பதிவு செய்துகொண்டு வேலை செய்யும் குடும்பம் ஒன்றுக்கு சராசரியாக ஆண்டுக்கு 20 நாட்கள் தான் வேலை கிடைக்கிறது. மேலும் நிதி குறைக்கப்பட்டு இருப்பதால் 10 நாட்களுக்குக் கூட வேலை கொடுக்க முடியாது.

கிராமப்புற ஏழை மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மோடி அரசு கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று கொண்டிருக்கிறது. கிராமப்புற ஏழைகளின் வயிற்றிலடிக்கும் மோடி அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs