BSNL நிறுவனத்தில் பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

news18
Updated: March 7, 2019, 7:35 PM IST
BSNL நிறுவனத்தில் பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
news18
Updated: March 7, 2019, 7:35 PM IST
மத்திய அரசின் பிரதான தொலைதொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல். இந்த நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் ஆபிஸர் பிரிவில் 198 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதில் எலக்ட்ரிக்கல் பிரிவில் 132 இடங்களும், சிவில் பிரிவில் 66 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிரிவு வாரியாக ஒதுக்கப்பட்டுள்ளன.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.


கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பி.இ., பிடெக் முடித்தவர்களாக இருக்க வேண்டும். மேலும், கேட் (GATE 2019) தேர்வு எழுதியிருக்க வேண்டும்.

தேர்வு முறை: தகுதியானவர்கள் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி மார்ச் 12. விண்ணப்பக் கட்டணமாக பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்.சி. எஸ்.டி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

Loading...

மேலும் விவரங்களுக்கு http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/pdf/srd_jto_2019.pdf என்ற லிங்க்கை பார்க்கவும்.

Also watch

First published: March 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...