Home /News /employment /

BSF Recruitment 2022 | எல்லைப் பாதுகாப்புப் படையின் குரூப் பி மற்றும் குரூப் சி பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு..!

BSF Recruitment 2022 | எல்லைப் பாதுகாப்புப் படையின் குரூப் பி மற்றும் குரூப் சி பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு..!

BSF Recruitment 2022

BSF Recruitment 2022

BSF Recruitment 2022 | மொத்தம் 281 காலி பணியிடங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி, தேர்வு செயல்முறை, காலி பணியிடங்கள் போன்ற பிற விவரங்களை பார்க்கலாம்.

    எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) வாட்டர் விங்-கின் குரூப் பி மற்றும் குரூப் சி பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான rectt.bsf.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    இதில் மொத்தம் 281 காலி பணியிடங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான பதிவு செயல்முறை மே 30, 2022 முதல் தொடங்கப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக ஜூன் 28 என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் கூறப்பட்டுள்ள பதவிகள் முற்றிலும் தற்காலிகமானவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இவை நிரந்தரமாகவும் மாற வாய்ப்புள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது. விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி, தேர்வு செயல்முறை, காலி பணியிடங்கள் போன்ற பிற விவரங்களை இனி பார்க்கலாம்.

    காலியிட விவரங்கள்..

    எல்லைப் பாதுகாப்புப் படையின் குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவுகளில் பல்வேறு காலி பணி இடங்கள் உள்ளன. அதன்படி,

    சப் இன்ஸ்பெக்டர் (மாஸ்டர்) 08 பணியிடங்களும்
    சப் இன்ஸ்பெக்டர் (இன்ஜின் டிரைவர்) 06 பணியிடங்களும்
    சப் இன்ஸ்பெக்டர் (வொர்க்ஷாப்) 02 பணியிடங்களும்
    ஹெட் கான்ஸ்டபிள் (மாஸ்டர்) 52 பணியிடங்களும்
    ஹெட் கான்ஸ்டபிள் (இன்ஜின் டிரைவர்) 64 பணியிடங்களும்
    ஹெட் கான்ஸ்டபிள் (ஒர்க்ஷாப்) மெக்கானிக் 10 பணியிடங்களும்
    ஹெட் கான்ஸ்டபிள் (ஒர்க்ஷாப்) எலக்ட்ரீசியன் 02 பணியிடங்களும்
    ஹெட் கான்ஸ்டபிள் (ஒர்க்ஷாப்) ஏசி டெக்னீசியன் 01 பணியிடங்களும்
    ஹெட் கான்ஸ்டபிள் (வொர்க்ஷாப்) எலக்ட்ரானிக்ஸ் 01 பணியிடங்களும்
    ஹெட் கான்ஸ்டபிள் (ஒர்க்ஷாப்) மெஷினிஸ்ட் 01 பணியிடங்களும்
    ஹெட் கான்ஸ்டபிள் (வொர்க்ஷாப்) கார்பெண்டர் 02 பணியிடங்களும்
    ஹெட் கான்ஸ்டபிள் (ஒர்க்ஷாப்) பிளம்பர் 02 பணியிடங்களும்
    கான்ஸ்டபிள் (குழு) 130 பணியிடங்களும் உள்ளன.

    சம்பள விவரம்..

    பதவிக்கு ஏற்ப சம்பளம் என்பது மாறுபடும். அந்த வகையில்,
    சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கான சம்பளம் ரூ. 35,400 – ரூ1,12,400
    எஸ்ஐ (இன்ஜின் டிரைவர்) பதவிக்கான சம்பளம் ரூ. 35,400 – ரூ. 1,12,400
    எஸ்ஐ (ஒர்க்ஷாப்) பதவிக்கான சம்பளம் ரூ. 35,400 – ரூ.1,12,400
    HC (மாஸ்டர்) பதவிக்கான சம்பளம் ரூ. 25,500 -81,100
    HC (ஓர்க்ஸ்ஹாப்) பதவிக்கான சம்பளம் ரூ. 25,500 -81,100
    HC பதவிக்கான சம்பளம் ரூ. 25,500 -81,100 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்க..

    எல்லைப் பாதுகாப்புப் படையின் பதவிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ வலைத்தளமான rectt.bsf.gov.in  பிரவுசரில் திறந்து கொள்ள வேண்டும்.

    அதன் முகப்புப் பக்கத்தில் உள்ள BSF Water Wing Recruitment 2022 (Group B & C) என்றுள்ள ஆப்ஷனை தேர்வு செய்து அங்குள்ள “Apply Here” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

    இதில் உங்கள் தனிப்பட்ட தகவலை உள்ளிட்டு OTP-ஐ உருவாக்கவும். பிறகு விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.

    அடுத்தாக அதில் தேவையான ஆவணங்களை பதிவேற்றவும். பிறகு விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

    இறுதியாக சமர்ப்பிக்கப்பட்ட படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளலாம்.
    Published by:Selvi M
    First published:

    Tags: BSF, Recruitment

    அடுத்த செய்தி