முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / இனிமே வார சம்பளம் தான் - Meesho, India Mart நிறுவனங்கள் அதிரடி..

இனிமே வார சம்பளம் தான் - Meesho, India Mart நிறுவனங்கள் அதிரடி..

மீஷோ

மீஷோ

Meesho : விர்ச்சுவல் ப்ளேஸ் எனப்படும், வேறு ஒரு இடத்தில் இருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்வது சாத்தியமில்லை என்ற ஒரு விஷயம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாறியுள்ளது.

  • Last Updated :

சில ஆண்டுகளுக்கு முன் வரை இல்லாத அளவுக்கு, பல்வேறு புதிய துறைகளும் பல்வேறு வேலை வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. வேலை வாய்ப்பு அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு திறமைசாலிகளை தேர்வு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, வேறு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் திறமைசாலிகளை தங்கள் நிறுவனங்களுக்கு பணியமர்த்த அதிக சம்பளம், சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றையும் வழங்கி வருகின்றன. இணைய வணிகங்களில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிய யூனிகார்ன் நிறுவனமான மீஷோ இதுவரை இல்லாத ஒரு புதிய வொர்க்ஃபோர்ஸ் மாடலை அறிவித்துள்ளது.

உலகில் எந்த மூலையில் இருந்தாலும் மீஷோ நிறுவனத்தில் பணியாளர்கள் வேலை செய்யலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. மீஷோ நிறுவனத்தின் துணைத் தலைவரான விடித் ஆத்ரே இதைப்பற்றி டிவீட்களைப் பகிர்ந்துள்ளார்.

விர்ச்சுவல் ப்ளேஸ் எனப்படும், வேறு ஒரு இடத்தில் இருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்வது சாத்தியமில்லை என்ற ஒரு விஷயம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாறியுள்ளது. எங்கிருந்து வேண்டுமானாலும், வேலை செய்யலாம் என்ற மாற்றம் உருவாகியுள்ளது. நிரந்தரமில்லாத நிலையில்லாத இந்த உலகில் நாங்கள் பல்வேறு மாடல்களை உருவாக்கி ஆய்வு செய்து தற்பொழுது வணிக வளர்ச்சி, நீடித்திருக்கும் மற்றும் அனைவருக்கும் பயனளிக்கும் வேலை மாடல்களை உருவாக்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : பெல் நிறுவனத்தில் வேலை, ரூ.37,500 சம்பளம் - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

நிறுவனத் தலைவர்கள், ஊழியர்களின் உளவியல் மற்றும் உடல் ரீதியான பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகும். எந்த இடத்திலிருந்து பணி செய்கிறோம் என்பது முக்கியமல்ல. ஊழியர்களின் திறன் மற்றும் வசதியாக உணர்வது முக்கியம், என்றும் கூறியுள்ளார். இந்த மாடலை நாங்கள் நிறுவுவதற்கு முன்னர் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தோம். உலக அளவில் திறமைகள் எங்கிருந்தாலும் எங்கள் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும் என்று மீஷோ நிறுவனத்தின் தலைமை மனித வளத்துறை அதிகாரி ஆஷிஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

தற்போது பெங்களூரில் தலைமை அலுவலகத்தோடு செயல்படும் நிறுவனம், விரைவில் சாட்டிலைட் அலுவலகங்களையும் அமைக்க இருக்கிறது. அதுமட்டுமின்றி, தன்னுடைய ஊழியர்களை ஸ்பான்சர் வழங்கப்பட்ட வருடாந்திர பணியிடங்கள், மற்றும் அவர்கள் விரும்பும் விளையாட்டு மற்றும் கிளப்கள் மூலமாக ஊக்கப்படுத்த விரும்புகிறது. அது மட்டுமின்றி, பொருந்தக்கூடிய ஊழியர்களுக்கு, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தால் தேவையான இடங்களில் அதற்குரிய உதவி மற்றும் ஆதரவு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு பெல் நிறுவனத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்

புதிதாக நிறுவனத்தில் சேர்பவர்களுக்கு விர்ச்சுவல் வீடியோ மற்றும் இணையம் வழியாக பயிற்சி பயிற்சி முகாம் மற்றும் அறிமுக நிகழ்வுகள் ஆகியவை நடத்தப்படும். இதன் மூலம் நிறுவனத்தை பற்றி எளிதாக அறிந்து கொள்ள மற்றும் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் குழுவாக இணைவதற்கு இது உதவியாக இருக்கும்.

பேஸ்புக் நிறுவனத்தால் ஆதரவளிக்கப்படும் மீஷோ நிறுவனம், தற்போது கம்யூனிட்டி வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதற்கு தேவையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்து வருகிறது. பல்வேறு விதங்களில் தனித்துவமான மாற்றங்களையும், உதாரணங்களையும் உருவாக்கிய மீஷோ நிறுவனம் ஏற்கனவே 30 வார பாலின பாகுபாடு இல்லாமல் பெற்றோர்களுக்கான விடுமுறை பாலிசியை அறிவித்திருந்தது.

இதையும் படியுங்கள் : யுபிஎஸ்சி-யில் 14 காலியிடங்கள்: என்னென்ன பதவிகள்? ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி?

வணிகம்-வணிக நிறுவனமான இந்தியா மார்ட் நிறுவனமும் தற்போது வாராந்திர சம்பளம் என்ற முறைக்கு மாறியுள்ளது. ஊழியர்கள் நிதிநிலைமை ஆரோக்கியமாக இருப்பதற்கும், அவர்களுக்கு நெகிழ்வுத் தன்மை நிறைந்த பணியிடத்தை அமைப்பதற்கும் இந்தியாமார்ட் நிறுவனம் இந்தியாவின் முதல் நிறுவனமாக திகழ்கிறது நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான தினேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Job Vacancy, Meesho App