எல்லை பாதுகாப்புப் படை ஆய்வளாளர், உதவி ஆய்வாளர் , இளநிலை பொறியாளர்(குரூப் - பி ) ஆகிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலிபணியிடங்கள்: 90
பனியின் பெயர் |
எண்ணிக்கை |
கல்வித் தகுதி |
ஆய்வாளர் (கட்டிடக்கலை) |
1 |
அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை படிப்பில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
உதவி ஆய்வாளர் |
57 |
சிவில் படிப்பில் பட்டயப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் |
இளநிலை பொறியாளர் |
32 |
எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங் படிப்பில் பட்டயப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். |
முக்கியமான நாட்கள்:
ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள் : 20/04/2022
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் : ஜுன் மாதம் 8 இரவு 11:59 மணி வரை (08/06/2022), நண்பகல் 12 மணி
எழுத்துத் தேர்வு: பின்னர் அறிவிக்கப்படும்.
சம்பளம்: ஆய்வாளர் : matrix level-7 (Rs.44,900-1,42,400) உதவி ஆய்வாளர்: Pay matrix level-6 (Rs.35,400-1,12,400)
வயது வரம்பு: 2022 ஜுன் மாதம் 8 தேதியின்படி, அதிகபட்ச வயது வரம்பு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் ஐந்து ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.
இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் மூன்று ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்,
முன்னாள் இராணுவத்தினருக்கு, மத்திய அரசுப் பணியாளர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பில் இருந்து அதிகபட்சமாக ஐந்து ஆண்டிகள் வரை வயது வரம்பு சலுகை உண்டு.
விண்ணப்பக் கட்டணம்: அனைத்து வகுப்பைச் சேர்ந்த பெண்கள் / பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர் கட்டணச் சலுகை பெற தகுதியுடைவர்கள்.
ஏனைய தேர்வர்கள் அனைவரும், இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, ரூ.200 தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். எஸ்பிஐ வங்கிக் கிளையின் மூலமாகவோ அல்லது ரூபே/விசா/ மாஸ்டர் வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ, ஆகியவை மூலமாகச் செலுத்தலாம்.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், உடல் தகுதி தேர்வு, மற்றும் மருத்துவ தகுதி தேர்வுகளில் தகுதி பெற வேண்டும். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
https://rectt.bsf.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு
இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவுமஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.